Monday, August 11, 2014
ஜப்பான் பிரதமர் ஜின்சோ அபே எதிர்வரும் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பிற் அமைய அபே இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட முக்கிய தவைலர்களுடன் ஜப்பான் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவும், வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்திக்கொள்ளவும் இந்த விஜயம் ஏதுவாகும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசீ அக்காஸி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
எதிர்வரும் வாரமளவில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு மற்றும் நிபுணர் குழு போன்றன தொடர்பில் அக்காஸி ஆராய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment