Thursday, August 14, 2014

யுத்த கால இழப்புக்கள் தொடர்பிலான அறிக்கை தயாரிக்கும் பணிகள் பூர்ததி!

Thursday, August 14, 2014
யுத்த கால இழப்புக்கள் தொடர்பிலான  அறிக்கை தயாரிக்கும் பணிகள் பூர்ததியாகியுள்ளதாக இலங்கை சனத்தொகை மதிப்பீட்டு புள்ளி விபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
யுத்தம் இடம்பெற்ற காலத்திலான உயிரிழப்புக்கள், சொத்து சேத விபரங்கள் தொடர்பில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் யுத்தம் இடம்பெற்ற காலத்திலான உயிரிழப்புக்கள், உடல் ஊனம் மற்றும் சொத்து சேதங்கள் தொடர்பில் புள்ளி விபர மதிப்பீடுகள் பூர்ததியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சேத விபரங்கள் தொடர்பிலான அறிக்கை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் அடுத்த வாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதி தொடர்பில் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளுக்கு அமைய இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment