Friday, August 08, 2014
சென்னை::சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளை அனுப்பும் விவகாரம் தொடர்பாக, தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு இலங்கை அகதிகளை சென்னையைச் சேர்ந்த க்யூ பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பணம் வாங்கிக் கொண்டு, மீன்பிடிப் படகின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை அகதிகளை அனுப்புவதற்கு ஏற்பாடுகளைச் செய்துவந்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
மகேந்திரன் என்ற டேனியல், விஜயா என்ற இருவரும் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதி முகாமைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை என்ற ஊரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அந்த ஊரில் இருக்கும் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த தங்கும் விடுதியில் இவர்கள் தங்கியிருந்த நிலையில், சென்னையிலிருந்து சென்ற க்யூ பிரிவு காவல்துறையினர் இவர்களைக் கைதுசெய்துள்ளனர்.
மகேந்திரன் என்பவர்தான் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளை அனுப்பும் குழுவின் மூளையாகச் செயல்பட்டார் என்று கருதப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல விரும்பும் அகதிகளை திரட்டுவதற்காகவே இவர்கள் திசையன்விளையில் தங்கியிருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட க்யூ பிரிவு காவல்துறையினர் 10 பேரை கைது செய்துள்ள நிலையில், இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலியில் இவர்களை விசாரித்த காவல்துறையினர், அவர்களை ஏற்கனவே கைதுசெய்யப்பட்டவர்களுடன் சேர்த்து விசாரிப்பதற்காக நாகர்கோவில் அழைத்துச் சென்றுள்ளனர்.
சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல விரும்புவர்கள் தமிழக கடற்கரைப் பகுதியிலிருந்து சாதாரண ஃபைபர் படகுகளில் முதலில் ஏற்றப்படுவார்கள். அதன் மூலம் நடுக்கடலுக்குச் சென்று, பெரிய மீன்பிடிப் படகுகளுக்கு அவர்கள் மாற்றப்படுவார்கள்.
அகதிகளை ஃபைபர் படகுகளில் ஏற்றுவதற்கு சரியான கடற்கரைப் பகுதியைத் தேடி, உவரி, இடிந்தகரை, கூத்தங்குழி போன்ற இடங்களை இந்த இருவரும் பார்த்துச் சென்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதேபோல அகதிகளைச் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பும் விவகாரத்தில் சுகந்தன், சுதன் என்ற இரண்டு இலங்கை அகதிகளும் அருண் என்ற இந்தியரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் க்யூ பிரிவு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் மூவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

No comments:
Post a Comment