Thursday, August 07, 2014
இலங்கை::நாட்டின் வெளியுறவுக்கொள்கைகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கிராமங்களுக்குச் சென்று நாட்டின் வெளியுறவுக்கொள்கை பற்றி தெளிவுபடுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு எந்தவிதமான கேள்வியையும் எழுப்பவில்லை, யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரே கேள்வி எழுப்புகின்றது எனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தூதுவர்கள் உயர்ஸ்தானிகர்கள் அர்ப்பணிப்புடன் நாட்டுக்காக சேவையாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் வெளிவிவகார அமைச்சின் மீது சேறு பூசி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனத்துடன் சிறந்த உறவு பேணப்பட்டு வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பெயரில் பலஸ்தினத்தில் வீதியொன்று காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை பலஸ்தீனம் தொடர்பில் பின்பற்றி வரும்கொள்கைகளில் மாற்றமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை காலமும் இலங்கையின் நிலைப்பாடு குறித்து பலஸ்தீனம் கேள்வி எழுப்பியதில்லை எனவும், எதிர்க்கட்சிகள் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளுடனும் சிறந்த உறவு பேணப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment