Thursday, August 7, 2014

வேதாரண்யம் அருகே இலங்கை படகால் பரபரப்பு!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

Thursday, August 07, 2014
வேதாரண்யம்::வேதாரண்யம் அருகே கடலில் இலங்கை படகு சென்றதாக கூறப்பட்டதால், தங்கம் கடத்தி வரப்பட்டதா என்பது குறித்து போலீசார் விடிய விடிய வாகன சோதனை நடத்தினர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மணியந்தீவு  அருகே கடலில் இலங்கை படகு ஒன்று சென்றதாக, வேதாரண்யம் போலீசாருக்கு மீனவர்கள் நேற்று மாலை தகவல் தெரிவித்தனர்.
 
இதனால் மர்ம நபர்கள் தங்கம் கடத்தி வந்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.இதையடுத்து வேதாரண்யம் சட்டம் ஒழுங்கு டிஎஸ்பி கண்ணன், கடலோர காவல் படை டிஎஸ்பி குணசேகரன், கோடியக்கரை கலால் கண்காணிப்பாளர் சிவசாம்பமூர்த்தி மற்றும் போலீசார் நேற்றிரவு முதல் கோடியக்கரை, ராமர் பாதம், சித்தர் கூடம், உழவர் கோட்டம், மணியந்தீவு பகுதியில் அதிரடி வாகனை சோதனை நடத்தினர். அந்த பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. விடிய விடிய நடந்த இந்த சோதனையில் தங்கம் பிடிபடவில்லை.

No comments:

Post a Comment