Thursday, August 7, 2014

காசா தாக்குதல் விவகாரத்தில் இங்கிலாந்து கொள்கைக்கு எதிர்ப்பு: முஸ்லிம் அமைச்சர் ராஜினாமா!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

Thursday, August 07, 2014
காசா முனையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் விவகாரத்தில், இங்கிலாந்தின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் சயீதா வார்சி தனது பதவியை ராஜினாமா செய்தார்.இங்கிலாந்தில் வெளியுறவு மற்றும் சமூக நல்லுறவு துறைகளின் அமைச்சராக பணியாற்றி வருபவர் சயீதா வார்சி. இங்கிலாந்தின் முதல் முஸ்லிம் பெண் அமைச்சர் என்ற பெருமை பெற்றவர். இவர், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர். காசா போர் விவகாரத்தில் இங்கிலாந்து அரசின் கொள்கை பிடிக்காமல் நேற்று ராஜினாமா செய்தார். பாலஸ்தீனத்தில் உள்ள காசா முனையில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

 இந்த விவகாரத்தில் இங்கிலாந்து அரசு, இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுவதாக சயீதா வார்சி குற்றம்சாட்டியுள்ளார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்து பிரதமர் கேமரூனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்தும் கொள்கையில் நாம் பின்வாங்கக் கூடாது. ஆனால், காசா போர் விவகாரத்தில் நமது அரசின் கொள்கை சரியாக இல்லை. இது உலக நாடுகள் மத்தியில் இங்கிலாந்தின் பெருமையை குறைக்கும். எனவே, நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். அதே சமயம், நமது கட்சிப் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன்’ என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து சயீதா தனது டுவிட்டரில், ‘காசா விவகாரத்தில் இங்கிலாந்தின் கொள்கைக்கு தொடர்ந்து நான் ஆதரவு அளிக்க முடியாது. எனவே, ராஜினாமா செய்தேன்’ என குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்து பிரதமர் கேமரூன் விடுமுறையில் வெளிநாடு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment