Wednesday, August 06, 2014
சென்னை, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில்
சர்வதேச பின்னணி மற்றும் பண பரிவர்த்தனை குறித்து விசாரிக்க இலங்கையில்
இருக்கும் குமரன் பத்மநாபனை இந்தியாவுக்கு அழைத்து வர உத்தரவிடக் கோரி
தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சி.பி.ஐ. முன்னாள் அதிகாரி மோகன்ராஜ் தாக்கல் செய்தமனுவில்
ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் சர்வதேச பின்னணி மற்றும் பரிமாற்றம்
குறித்து சி.பி.ஐ.யில் பல்நோக்கு ஒழுங்கு கண்காணிப்பு ஆணையம் விசாரித்து
வருகிறது.
இந்த வழக்கில் புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான
குமரன் பத்மநாபனின் பங்கும் உள்ளது. இப்போது இவர் இலங்கை அரசின்
கட்டுப்பாட்டில் உள்ளார். எனவே அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து
விசாரிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று அவர் மனுவில்
கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்யநாராயணன் ஆகியோர்
முன்பு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் தரப்பில் ஆஜரான வக்கீல் சென்னை
தடாக் கோர்ட்டில் சி.பி.ஐ. முன் பல்நோக்கு ஒழுங்கு கண்காணிப்பு ஆணையம் 3
மாதத்திற்கு ஒருமுறை தனது விசாரணை குறித்து ரகசிய அறிக்கை தாக்கல் செய்து
வருகிறது. இந்த மனு தேவையற்றது என்று அறிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

No comments:
Post a Comment