Monday, August 25, 2014
இலங்கை::அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலி்ல் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறவே பராக் ஒபாமா புலிகளுக்கு ஆதரவளிப்பதாக அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி குற்றம்சாட்டியுள்ளார். கம்பளையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் அணி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாகத் தோன்றும் எமது சிறிய நாட்டுக்கு எதிராக அமெரிக்கா செயற்பட, அவர்களின் புலி ஆதரவுப் போக்கே காரணம்.

இலங்கையைப் பிரித்து, தனிநாடொன்றை அமைத்துத் தருவதாக ஒபாமா புலிகளுக்கு முன்னர் வாக்குறுதி அளித்திருந்தார். அதனை நிறைவேற்றும் நோக்கிலேயே இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து விசாரணை நடத்துகின்றனர். தற்போது இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமரூனும் ஒபாமாவுடன் சேர்ந்து கொண்டுள்ளார்.
இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு கேமரூன் தனிப்பட்ட முறையில் பல நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவர்கள் இருவரும் இன்னொரு தடவை தேர்தலை சந்திக்கவுள்ளார்கள். அப்போது அந்நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று தங்கள் வெற்றியைத்தக்க வைத்துக் கொள்ளவே புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர்.
அதன் ஒரு அங்கமாகவே எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்றுவதற்கான சதி நடக்கின்றது. அதற்கு நாம் உடந்தையாகி விடக் கூடாது. ரணில் இ்ந்நாட்டின் ஜனாதிபதியானால் நாட்டைத் துண்டாடி விடுவார். புலிகளின் நோக்கத்தை இலகுவாக நிறைவேற்றிக் கொடுத்து விடுவார். அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது என்றும் அமைச்சர் பவித்ரா தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஒபாமா இனிமேல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment