Tuesday, August 26, 2014

இலங்­கையில் உள்ள தமி­ழர்கள் வட மாகா­ணத்­துக்கு பொலிஸ் அதி­கா­ரங்­களை கோர முடி­யாது: சர்­வ­தேச நிபுணர் குழுவின் உறுப்பினர் அவ்டாஸ் கௌஷால்!

Tuesday, August 26, 2014
இலங்­கை::இலங்­கையில் உள்ள தமி­ழர்கள் வட மாகா­ணத்­துக்கு பொலிஸ் அதி­கா­ரங்­களை கோர முடி­யாது. மேலும் இந்­தி­யாவும் இலங்­கையும் ஒவ்­வொரு நாட்­டி­னதும் இறை­யாண்­மையைமதிக்க வேண்டும் என்று காணாமல் போனோர் தொடர்­பாக விசா­ரணை நடத்­து­வ­தற்காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஆணைக்­கு­ழுவுக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­கான சர்­வ­தேச நிபுணர் குழுவின் உறுப்பினர் அவ்டாஸ் கௌஷால் தெரி­வித்­துள்ளார்.

இலங்கை அர­சாங்­கத்­துடன் பேச்சு நடத்­தலாம். அத்­துடன், ஆலோ­ச­னை­க­ளையும் வழங்க முடியும். ஆனால், இவ்­வாறு செய்­யுங்கள் என்று நாம் கோரிக்கை விட முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

நியூ இந்­தியன் எக்ஸ்­பிரஸ் பத்­தி­ரி­கைக்கு வழங்­கி­யுள்ள செவ்­வி­யி­லேயே அவர் மேற் கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார். சர்­வ­தேச நிபுணர் குழுவின் உறுப்­பினர் அவ்டாஸ் கௌஷால் மேலும் கூறி­யுள்­ள­தா­வது;

இலங்­கையின் தமிழ் மக்­களின் பிரச்­சி­னையை தீர்க்க உதவிசெய்யும் அதே­வேளை இலங்­கையின் இறை­மையை இந்­தியா மதிக்­க­வேண்டும். இலங்கை அர­சாங்­கத்­துடன் பேசமுடியும்.
ஆலோ­ச­னை­களை வழங்க முடியும். ஆனால் இதனை செய்­யுங்கள் என்று கோரிக்கை விடுக்க முடி­யாது. இலங்­கையின் இறை­மையை இந்­தி­யாவும் இந்­தி­யாவின் இறை­மையை இலங்­கையும் மதிக்­க­வேண்டும்.

இந்­தி­யாவில் உள்ள பிரி­வி­னை­வா­தி­க­ளுடன் பேசு­மாறு இல்­ஙகை கூறினால் நாம் எவ்­வாறு உணர்வோம்? எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற கூடாது. எனினும் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண உதவ வேண்டும்.

நாம் பெரிய அண்ணன் என்ற வகையில் அழுத்தம் பிர­யோ­கிக்­கக்­கூ­டாது. இலங்­கையில் 13 ஆவது திருத்தச் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வதில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள முன்­னேற்­றங்கள் குறித்து இந்­தியா பாராட்­ட­வேண்டும். அத்­துடன் இந்த விட­யத்தில் இலங்கை தொடர்ந்து முன்­செல்­ல­வேண்டும் என்று வலி­யு­றுத்­த­வேண்டும்.

இலங்­கையில் உள்ள தமி­ழர்கள் தம்மை இலங்­கை­யர்கள் என்று உண­ர­வேண்டும். அந்­த­வ­கையில் இலங்­கையின் சட்­டத்­துக்கும் அர­சி­ய­ல­மைப்­புக்கும் உட்­ப­ட­வேண்டும். அவர்கள் வட மாகா­ணத்­துக்கு பொலிஸ் அதி­கா­ரங்­களை கேட்க முடி­யாது.

இதே­வேளை இந்­தி­யாவின் சமூக சேவை­யா­ளரும் மனித உரிமை செயற்­பாட்­டா­ள­ரு­மான அவ்டாஸ் கௌஷால் காணாமல் போனோர் ஆணைக்­கு­ழு­வுக்கு ஆலோ­சனை வழங்கும் குழுவின் உறுப்­பி­ன­ராக கடந்த வாரம் ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்டார்.

இதற்கு முன்னர் மூன்று நிபு­ணர்கள் சர்­வ­தேச நிபுணர் குழு­வுக்கு நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தனர். சேர் டெஸ்மன் டி சில்வா, சேர் ஜெப்ரி நைஸ் மற்றும் டேவிட் க்ரேய்ன் ஆகியோர் இந்தக் குழுவில் இட­ம­பெற்­றி­ருந்­தனர்.

இந்­நி­லையில் கடந்த வாரம் இந்­தி­யாவின் மனித உரிமை செயற்­பாட்­டாளா் அவ்டாஷ் கவ்ஷால் மற்றும் பாகிஸ்­தானைச் சேர்ந்த மனித உரிமை செயற்­பாட்­டா­ளரும் சட்­டத்­த­ர­ணி­யு­மான அக்மட் பிலால் மேல­திக உறுப்­பி­னர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தனர். அவ்டாஷ் கௌசால் இந்­தி­யாவின் சார்பில் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை என்றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது இவ்­வாறு இருக்க கடந்த வாரம் இந்­தி­யா­வுக்கு விஜயம் மேற்­கொண்ட இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­திகள் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தனர்.

இதன்­போது ''இலங்­கையின் அனைத்து தரப்­புக்­களும் ஒன்­றி­ணைந்து விட்டுக்கொடுப்புடன் அரசியல் தீர்வைக்காண முன்வரவேண்டும். இந்தியாவின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். இதன் மூலம் தமிழ் மக்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படவேண்டும்'' என்று இந்திய பிரதமர் கூட்டமைப்பிடம் கூறியிருந்தார்.

No comments:

Post a Comment