Tuesday, August 26, 2014

மொனராகலை, படல்கும்பர பகுதியில் துப்பாக்கிச்சூடு: இரண்டு பொலிஸார் படுகாயம்!

Tuesday, August 26, 2014
இலங்­கை::மொனராகலை, படல்கும்பர பகுதியில் தேர்தல் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்த ஜே.வி.பி குழு மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தடுக்கச் சென்ற பொலிஸார் இருவர் காயமடைந்தனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.படல்கும்பர பிரதேச சபையின் தலைவர், பிரதி தலைவர் உள்ளிட்ட குழுவினரே தமது ஆதரவானர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என்று ஜே.வி.பி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
 
மோதலை தடுக்க முயன்ற பொலிஸார் மீது ஆயுத தாரிகள் தாக்குதல் நடத்தினர் என்றும் இதனையடுத்து அங்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும், மேலதிக விசாரணைகளைத் தாம் மேற்கொண்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
 

No comments:

Post a Comment