Tuesday, August 26, 2014

கனடா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் புலிகளின் செயற்பாடுகளை தடுக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை!

Tuesday, August 26, 2014
இலங்­கை::வெளிநாடுகளில்  புலிகளின் செயற்பாடுகளைத் தடுக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
கனடா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் புலிகளின் செயற்பாடுகளை ஒடுக்கும் நோக்கில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
 
அந்தந்த நாடுகளின் இராணுவப் புலனாய்வுப் பிரிவுகளுடன் இணைந்து பாரியளவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.புலிகளின் செயற்பாடுகளை ஒடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்க்பபட்டுள்ளன.
 
வெளிநாடுகளில் வாழந்து வரும் புலி உறுப்பினர்கள் பகிரங்கமாக செயற்படுவதில்லை எனவும், இரகசியமான முறையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சில சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளில் போராட்டங்களை கூட புலி உறுப்பினர்கள் நடத்தி வருகின்றனர்.
 
வெளிநாடுகளுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் விரைவில் புலிகளின் செயற்பாடுகளை இல்லாதொழிக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment