Tuesday, August 26, 2014
இலங்கை::புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் புலிகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை::புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் புலிகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக்க தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களின் பொருளாதார நிலை, சமூகமயம் மற்றும் வாழ்வாதார நிலைமைகள் தொடர்பில் இதனூடாக கண்டறியப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், வவுனியா புனர்வாழ்வு மையத்தில் 109 பேருக்கு தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
ஒரு வருடகால பயிற்சிகளை முன்னெடுக்கும் இவர்கள் அடுத்தவருடத்தின் நடுப்பகுதியில் விடுவிக்கப்படுவார்கள் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மீளாய்வு நடவடிக்கைகள் முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேஜர் ஜென்ரல் ஜகத் விஜேதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment