Tuesday, August 26, 2014

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இனவாத, மதவாத அரசியல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்: ரொஹான் குணரட்ன

Tuesday, August 26, 2014
இலங்­கை::இனவாத மற்றும் மதவாத அரசியல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென பயங்கரவாத தடுப்பு தொடர்பான நிபுணத்துவ பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை அரசாங்கத்தினால் மட்டும் மேற்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் சிவில் சமூகம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத அமைப்பு ஒன்றில் அங்கம் வகித்த ஒருவர், தேசிய அரசியல் நீரோட்டத்தில் பங்கேற்க அனுமதிக்காத வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சட்டம் இருந்திருந்தால் ஜே.வி.பி.யினால் அரசியலில் ஈடுபட்டிருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகள் போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்துகொள்ளும் நோக்கிலேயே 13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய மாதிரியிலான தீர்வுத் திட்டங்கள் இலங்கைக்கு பொருத்தமாகாது எனவும், உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முனைப்புக்களில் இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஒத்துழைப்பு வழங்கப்பட்டிருக்காவிட்டால் இலங்கையில் யுத்தத்தை முடிவுக்குக்கொண்டு வந்திருக்க முடியாது என்பதே தமது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி, பிராந்திய வலய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயற்படுவார் என கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அரசியல் காரணிகளை விடவும் பொருளாதார விவகாரங்களுக்கு மோடி அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment