Monday, August 25, 2014

காந்தி’ படத்தை இயக்கியரிச்சர்ட் அட்டன்பரோ இங்கிலாந்தில் மரணம்!

Monday, August 25, 2014
லண்டன்: காந்:தி படத்தை தயாரித்த பிரபல ஹாலிவுட் இயக்குநரும், நடிகருமான ரிச்சர்ட் அட்டன்பரோ நேற்று லண்டனில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 90.இங்கிலாந்து தலைநகரான லண்டனில் பிறந்தவர் ரிச்சர்ட் அட்டன்பரோ. இவர் தனது 12 வயதில் நடிக்கத் தொடங்கினார். இங்கிலாந்தின் பிரபல நடிகராக விளங்கிய அட்டன்பரோ, பின்னாளில் டைரக்டர் ஆனார். பிரைட்டன் ராக், தி கிரேட் எஸ்கேப், சத்யஜித்ரேயின் தி செஸ் பிளேயர்ஸ், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஜூராசிக் பார்க், உள்பட பல்வேறு படங்களில் நடித்து  அசத்தியவர்.

ஜூராசிக் பார்க் படத் தில் டைனோசரின் முட்டைகளை தனது ஆய்வகத்தில் வைத்து உருவாக்கி, அவற்றை மற்றவர்களுக்கு தத்ரூபமாக விளக்குவார். அதேபோல், டைனோசரால் அந்த ஆய்வகம் அழியும்போதும் தனது சோகத்தை அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார்.கடந்த 1982&ம் ஆண்டு, மகாத்மா காந்தியின வரலாற்றை ரிச்சர்ட் அட்டன்பரோ திரைப்படமாக இயக்கினார். இங்கிலாந்து திரைப்பட வரலாற்றிலேயே இந்த திரைப்படம்தான், சிறந்த தயாரிப்பு உட்பட பல்வேறு பிரிவுகளில் 8 ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்தது. அட்டன்பரோ கடந்த 2008ம் ஆண்டு முதல் நோய்வாய்ப்பட்டிருந்தார். கடந்த சில மாதங்களாக பல்வேறு உடல்நலக் கோளாறுகள் காரணமாக லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மதியம் அவர் மரணமடைந்தார் என்று அவரது மகன் மைக்கேல் அட்டன்பரோ தகவல் வெளியிட்டார்.

அட்டன்பரோ மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வெளியிட்ட செய்தியில், ‘அட்டன்பரோ, சினிமா உலகில் மிக சிறந்து விளங்குபவர். அவர் பிரைட்டன் ராக் படத்தில் அற்புதமாக நடித்திருப்பார். அதேபோல், காந்தி திரைப்படத்தையும் அற்புதமாக இயக்கி உள்ளார். அவரது மறைவு இங்கிலாந்து திரையுலகிற்கு மிகவும் பேரிழப்பாகும்’ என்று தெரிவித்தார். அட்டன்பரோ மறைவுக்கு உலகம் முழுவதும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து நடிகை மியா பரோ, நடிகர் ரோஜர் மூர் உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment