Friday, August ,01, 2014
இலங்கை::அரசியல் சாசன குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையிலான உத்தேச ஆவணமொன்று தயாரிக்கப்படுகின்றது , சரத் என் சில்வா
அரசியல் சாசன குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையிலான உத்தேச வரைவத் திட்ட ஆவணமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட வல்லுனர்கள் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய குழுவொன்று இந்தப் பணிகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரரின் வழிகாட்டல்களுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment