Friday, August 1, 2014

புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் ஆட்கடத்தல் காரர்களுக்கான தளமாக, தென்னிந்தியா மாறுவதற்கு அனுமதிக்க கூடாது: இந்தியாவிற்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பட்ரிக் சக்ளிங் வேண்டுகோள்!

Friday, August ,01, 2014
சென்னை::புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் ஆட்கடத்தல் காரர்களுக்கான தளமாக, தென்னிந்தியா  மாறுவதற்கு அனுமதிக்க கூடாது என இந்தியாவிற்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பட்ரிக் சக்ளிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தும் நடவடிக்கை தென்னிந்தியாவில் ஆழமாக வேருன்றினால் அது பயங்கரவாதம் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களுக்கு வழிவகுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்கள் அவுஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதமாக நுழையும் பட்சத்தில் அவர்களை மீண்டும் தனது நாட்டிற்கு திருப்பி அனுப்புவதை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.   

ஒரு சில புகலிடக் கோரிக்கையாளர் படகுகளே அவுஸ்திரேலியாவிலிருந்து வருவதாக இந்தியாவிற்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்     பெட்ரிக் சக்லீங் தெரிவித்துள்ளார்.

எனவே சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கான மாற்று இடமாக இலங்கையை கருத முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆறு மாத காலப்பகுதியில் ஒரு படகு கூட இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவை சென்றடையவில்லை எனவும், மிகவும் சொற்பளவான படகுகள் இலங்கையிலிருந்து சென்றடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்காவிட்டால் வேறும் வழியிலான பிரச்சினைகள் தவறுகள் இடம்பெறக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட வேறும் பிரச்சினைகள் ஏற்படக் கூடமென குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலமாக இந்தியாவில் தங்கியிருந்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை மீள அழைத்துக்கொள்ள இணங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் தென் இந்தியாவைக் களமாகப் பயன்படுத்தி அவுஸ்திரேலியா நோக்கி பயணிப்பதனை தடுக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

No comments:

Post a Comment