Friday, August 1, 2014

யுத்தத்தின் போது புலிகள் பயன்படுத்திய வெளிநாட்டு ஆயுதங்கள் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம் என ராஜதந்திரிகள் கோரினர்:கெஹலிய ரம்புக்வெல்ல!

Friday, August ,01, 2014
இலங்கை::யுத்தத்தின் போது  புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிட வேண்டாம் என சில ராஜதந்திரிகள் கோரியிருந்தனர் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நோக்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புலிகள் வெளிநாட்டு ஆயுங்களைப் பயன்படுத்தியிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் பதுங்கு குழிகள் மற்றும் முகாம்களிலிருந்து மீட்கப்பட்ட ஆயதங்களின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியது என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பிலான தகவல்களை ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என சில வெளிநாட்டு ராஜதந்திரிகள் கோரியிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக இவ்வாறான ஆயதங்களை புலிகள் பெற்றுக்கொண்டிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment