Monday, August 18, 2014

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நடவடிக்கைகள் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது: பீ.பி. ஜயசுந்தர!

Monday, August 18, 2014
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நடவடிக்கைகள் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நடவடிக்கைகள் நாட்டின் சட்டம் ஒழுங்கு, நிதி முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்கு இடையூறாகவும் அச்சுறுத்தலாகவும் அமைந்துள்ளது என திறைசேரியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இன்றைய தினம் ஆரம்பமான சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் கடத்தல், கணனி குற்றச் செயல்கள் மற்றும் கடத்தல்கள் போன்றன உலகப் பொருளாதாரத்தை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பீ.பி. ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதேவேளை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வரம்பு மீறிச்செயற்பட்டு வருவதாக அண்மையில் பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment