Monday, August 11, 2014
காஸா::எகிப்து அரசு மேற்கொண்ட முயற்சியால் காஸா பகுதியில்
மீண்டும் 72 மணி நேரப் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எகிப்து
தலைநகர் கெய்ரோவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
கெய்ரோவில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்க, இஸ்ரேல் குழுவினர்
இன்று புறப்பட்டுச் செல்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக
எகிப்து அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பில்,
72 மணி நேரப் போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பயனப்டுத்தி, இரு
தரப்பினரும் சுமுக முடிவை எடுக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment