Monday, August 11, 2014

மேற்­கத்­தேய பிரி­வி­னை­வா­தி­க­ளுக்கு ஏற்ற வகையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே அமெரிக்கா, பிரிட்டன் முயற்சி: இதற்கு உதவும் வகையில் புலிகளின் புலம்பெயர் அமைப்புக்கள் செயற்பாடு!

Monday, August 11, 2014      
மேற்­கத்­தேய பிரி­வி­னை­வா­தி­க­ளுக்கு ஏற்ற வகையில் இலங்­கையில் ஆட்சி மாற்­ற­ மொன்­றினை ஏற்­ப­டுத்தி இலங்­கையில் தீர்க்­கவே முடி­யாத இனப்­பி­ரச்­சி­னை­யொன்­றினை உரு­வாக்­கவே சர்­வ­தேச விசாரணைக் குமு­வினர் முயற்­சிக்­கின்­றனர்.
 
இலங்­கையில் ஆட்சி மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­து­வதே இவர்­களின் குறிக்கோள் எனத் ­தெ­ரி­விக்கும் அமைச்சர் சம்­பிக்க ரணவக்க, இலங்கை அரசு ஒத்­து­ழைக்­கா­வி­டினும் இலங்கை மீதான சர்­வ­தேச விசா­ரணை இடம்பெ­று­மென்­பது எம் மீதான அத்து மீறிய மனித உரிமை மீறல்கள் செயற்பா­டாகும் எனவும் அவர் குற்றம் சுமத்­தினார்
 
யுத்த குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணைகள் பல­ம­டையும் என்ற வகையில் பிரித்­தா­னிய தூதுவர் ஜோன் ரன்கின் குறிப்­பிட்­டுள்­ளமை தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
 
கேள்வி:ஆட்சி மாற்றம் ஒன்­றினை ஏற்­படுத்­து­வது அல்ல எமது நோக்கம். சுயா­தீ­ன­மான நம்­ப­கத்­தன்­மை­யான விசா­ர­ணையே அவ­சியம் என பிரித்­தா­னிய தூதுவர் தெரி­வித்­துள்ளார். இது தொடர்பில் உங்­களின் கருத்து என்ன?
பதில்: ஆட்­சி­மாற்றம் தமது நோக்­கமில்லை என சர்­வ­தேசம் கூறு­மாயின் இலங்கை விட­யத்தில் தொடர்ச்சி­யாக அழுத்தம் கொடுக்க வேண்­டியஅவ­சி­ய மில்லை.எனினும் சர்­வ­தே­சத்திற்கு ஏற்ற வகை­யி­லான விலை போகக்கூ­டிய அர­சாங்­க மொன்றினை உருவாக்கி இலங்­கையில் தொடர்ச்­சி­யான குழப்பங்­களை ஏற்­ப­டுத்­தவே முயற்­சிக்­கின்­றனர். அமெ­ரிக்கா பிரித்­தா­னியா ஆகிய மேற்­கத்­திய பேரி­ன­வாத நாடுகள் இன்று மத்­திய கிழக்கிலும் ஏனைய நாடு­க­ளிலும் தமது ஆதிக்­கத்­தினை செலுத்­து­கின்­றன. ஆயினும் அந்த நாடு­களில் இன்று வரையில் பிரச்­சி­னைக்­கான தீர்வு எட்­டப்­ப­ட­வில்லை.
குறிப்­பாக சொல்­வ­தாயின் இவர்­களின் தேவை பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தல்ல. பிரச்­சி­னை­களை வளர்த்து தமது ஆயுத வியா­பா­ரங்­க­ளையும் ஆதிக்­கத்­தி­னையும் செலுத்­துவதேயாகும்இதனை மேற்­கொள்ளும் நோக்­கி­லேயே இன்று முயற்­சித்து வரு­கின்­றனர். இலங்கைமீது அக்­க­றை­யுள்­ள­வர்­களாக இவர்கள் கதைப்­பது வெறும் நாடகமே. பிரி­வினை வாதி­க­ளுக்கு ஏற்ற வகையில்
இந்த நாட்டில் ஆட்­சி­மாற்­ற­மொன்­றினை ஏற்ப­டுத்தி தமது தேவை­களை நிறை­வேற்­றிக்­கொள்­ளவே இவர்கள் முயற்­சிக்­கின்­றனர். இதற்கு உதவும் வகையில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு, ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஆகிய கட்­சி-­களும் புலம்­பெயர் அமைப்­பு­களும் உதவி செய்து கொண்­டி­ருக்­கின்­றன.
கேள்வி:யுத்த குற்­றங்கள் தொடர்­பி­லான சர்­வ­தேச விசா­ர­ணைக்கு இலங்கை அரசு ஒத்­து­ழைக்­கா­வி­டினும் விசா­ரணை இடம்­பெ­று­மென தெரி­விக்­கப்­பட்­டுள்­ளதே?
பதில்: யுத்த குற்­றங்கள் தொடர்பில் சர்­வ­தேசம் இன்று வரையில் ஒரு பக்க விசா­ர­ணை­யி­னையே மேற்­கொண்டு வரு­கின்­றது. தமிழ் மக்கள் கொல்லப்­பட்­டனர் என தெரி­விப்­ப­வர்கள் சிங்கள மக்கள் கொல்­லப்­பட்­டமைதொடர்பில் ஏன் பேச­வில்லை? இழப்­புக்கள் தமி­ழர்­க­ளுக்கு மட்­டுமா நிகழ்ந்­தன. எமது நாட்டை சீர­ழித்து பயங்­க­ர­வா­தத்­தினை உரு­வாக்­கிய தமிழ் தீவி­ர­வா­தி­க­ளுக்கு ஆத­ரவு குரல் எழுப்­புவோர் இந்த நாட்டை கைப்­பற்றி நாட்டில் அமை­தியை உரு­வாக்க உயிர்த்­தி­யாகம் செய்த இரா­ணு­வத்­தினர் மீது பழி சுமத்­து­கின்­றனர். இன்று நாட்டில் தமிழ் மக்கள் எவ்­வித அடக்கு முறை­க­ளு­மின்றி சுதந்­தி­ர­மாக வாழ்­கின்­றனர். சிங்­கள மக்­க­ளுடன் இணைந்து வாழ்­கின்­றனர்.
அவ்­வாறு இருக்­கையில் உரிமை மீறல்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் சாட்டில் நாட்டில் தீர்க்­கவே முடி­யாத இனப்­பி­ரச்­சி­னை­யினை தோற்­று­விக்­கவே இவர்கள் முயற்­சிக்­கின்­றனர்.
அதேபோல் காணாமல் போனோர் தொடர்பில் விசா­ர­ணை­களை நடத்­து­வ­தற்கும் யுத்த குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் செயற்படுகின்றனர். இவை திருப்திகரமான விசாரணைகளாகவே அமையும். புதிதாக சர்வதேச நிபுணர் குழுவொன்றினை அனுமதித்து விசாரணைகளை மேற்கொள்ளவதென்பது தேவையற்ற ஒன்றாகும். இதற்கு அனுமதி வழங்கும் வகையில் அரசாங்கம் செயற்படாதென்ற நம்பிக்கை எமக்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment