ஐக்கிய நாடுகள் சபைக்கு உள்ளும் அதற்கு
வெளியேயும் உள்ள சில அமைப்புகள் நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின்
அடிப்படையை மீறுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற சூழல் நீதி தொடர்பான தென்னாசிய பிரதம நீதியரசர்களின் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்டங்களை நடைமுறைப்படுத்தும் தொடர்ச்சியும் சமமான தன்மையும் அவசியம், நீதிமன்றங்களும் சர்வதேச அமைப்புகளும் இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்தும் போதும் அர்த்தப்படுத்தும் போது இரட்டைவேடம் போடமுடியாது என்பதே இதன் அர்த்தமாகும். என தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு அனைவருக்கும் ஒரே விதமாக அமுல்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பினைச் சில நிறுவனங்களும், சில சர்வதேச நிறுவனங்களும் அடிப்படை நீதியை ஒரே விதமாக அமுல்படுத்துவதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு மத்திய வங்கி கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நீதி தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிறுவனங்கள் சர்வதேச நீதிமன்றங்கள் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்யுள்ளார்.
சர்வதேச மற்றும் தேசிய சட்டங்கள் ஒரே விதமாக அமுல்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிறுவனங்கள் சட்டவிரோதமான முறையில் நீதியை ஒரு பக்கச் சார்பாக அமுல்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
நீடித்த அபிவிருத்தி, சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான விடயங்களிலும் இந்த நிலைமையை காண முடிவதாகத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஐந்து ஆண்டுகளில் நாட்டில் பாரியளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு;ள்ளார்.

No comments:
Post a Comment