Saturday, August 09, 2014
மாஸ்கோ::அமெரிக்கா தேசிய பாதுகாப்பு அமைப்பின் ரகசியங்களை வெளியிட்ட எர்வர்ட்ஸ்னோ டென், ரஷ்யாவில் மேலும் 3 ஆண்டுகள் தங்குவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது.
இது குறித்து ஸ்னோடெனின் வழக்குரைஞர் அனல்டோலி குசிரேனா கூறியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவைச் சேர்ந்த எட்வர்ட் ஸ்னோடென் ரஷ்யாவில் தாற்காலிகமாக ஓராண்டு தங்குவதற்கான அனுமதி ஆகஸ்ட் 1-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.இந்நிலையில் அவர் ரஷ்யாவில் மேலும் 3 ஆண்டுகள் தங்குவதற்கான அனுமதியை ரஷ்ய அரசு நீட்டித்துள்ளது.
ஆனால் ஸ்னோடெனுக்கு அரசியல் ரீதியான புகலிடம் அளிக்கப்படவில்லை. அவர் அரசியல் ரீதியிலான புகலிடம் கோரியுள்ளாரா என்று அனல்டோலி குசிரேனா தெரிவிக்கவில்லை என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெிக்காவின் எஸ்எஸ்ஏ ரகசியங்களை வெளியிட்ட ஸ்னோடென் கடந்த ஆண்டு ஹாங்காங்கில் இருந்து கியூபா செல்லும் வழியில் ரஷ்யாவின் சர்வதேச விமான நிலையத்தில் ஒருமாத காலம் தங்கியிருந்தார்.
இதையடுத்து ஸ்னோடென், ரஷ்யாவில் ஓராண்டு காலம் தாற்காலிகமாகத் தங்குவதற்கான அனுமதியை அந்நாடு அளித்தது.

No comments:
Post a Comment