Tuesday, August 05, 2014
புதுடில்லி: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட, தமிழக
மீனவர்களின் படகுகளை மீட்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என,
மத்திய கனரக தொழல் துறை இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
தமிழக மீனவர்களின் நலனில், மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது. மத்திய அரசின்
தலையீட்டால், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, ஏராளமான மீனவர்கள்
விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் படகுகளை மீட்கும் விவகாரத்தில், மத்திய
அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதுகுறித்த நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் மீனவர்களின் படகுகள் மீட்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:
Post a Comment