Tuesday, August 5, 2014

கொழுத்திப் போடச் சொன்தும் சுரேஷ்தான்! கொழுதிப் போட்டது சுரேஸின் சகாக்கள்!!


Tuesday, August 05, 2014
எல்லாம் தெரிஞ்ச கமலாகரனா இப்பிடி? யாருடைய விமர்சனத்தை பற்றியும் கவலைப்படாமல் தனது இஸ்டத்திற்கு நடந்த ஒருவரை நாபாவின்ரை வழியிலை எப்பிடி விமர்சிக்கிறது? எப்பிடி ஆரோக்கியமாய் விமர்சிக்கிறது? இருந்தாலும் முயற்சிச்சுப் பார்ப்பம். சொத்துப் பிரச்சினை பற்றிப் பேச இங்கு யாருக்குத்தான் தகுதி இருக்கிறது ? என்று கேட்கிறீர்கள் சொத்துப் பிரச்சினையைப் பற்றிப் பேச ஒருவருக்கும் தகுதியில்லை எல்லாற்றை கையும் கறை படிஞ்சது தான் எண்டமாதிரி இப்ப சொல்ல வாறியளோ? சொத்துப் பிரச்சினையைப் பற்றிப் பேசும் தகுதி ஏணியாய் இருந்து உங்களை உயர்த்தி வைத்த உங்களை நம்பி ஏமாந்த அத்தனை தோழர்களுக்கும் இருக்கிறது. அதெப்பிடி பொதுச் சொத்தை சுருட்டிக்கொண்டு வெளியே போனால்
 
 மோசடி, பொதுச் சொத்தை சுருட்டிக்கொண்டு இங்கேயே நின்றால் புனிதமா? 
இதையும் நாபா கற்றுக்கொடுத்த வழி என்று சொல்ல மாட்டீர்களே? கட்சிப் பொதுச்செயலாளர் பதவியை விட மனமில்லாமல் திரும்பவும் தானே பொதுச்செயலாளராக வரவேண்டும் என்பதற்காக இன்றைக்கு மேடையில் வீற்றிருக்கும் ரட்ணம் உட்பட வரதராஜப்பெருமாள், கேதீஸ்வரன், றொபேட், சுகு, இளங்கோ, நிவாஸ், மோகன், கி.பி, சுப்பையா நகுலன், சிவம் என எல்லோரையுமே தூக்கியெறிந்து வவுனியாவில் காங்கிரஸ் என்ற பேரில் ஒரு கூட்டத்தை நடாத்தி தன்னை செயலாளர் நாயகமாக்கிக்கொண்டார். வரதராஜப்பெருமாள் கட்சி உறுப்பினரே இல்லை என்றும், துரைரட்ணம் கட்சியிலிருந்து தனாகவே விலகிக் கொண்டுவிட்டார் என்றும் சத்தியக்கடதாசி முடித்து சொந்தப்பேரில் ஒரு இடத்திலும் கட்சிப்பேரில் வேறொரு இடத்திலும் கையொப்பமிடச்செய்து வவுனியா காங்கிரசுக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கி நீதிமன்றத்திற்கு காட்டியவர்களிடம் உண்மையும், நேர்மையும் இருக்கிறதா கமலாகரன்?
 
எல்லாரையும் தெருவில விட்டு இராணுவத்தின்ரை ஆக்கள் என்று முத்திரை குத்தி புலி போட்டுத் தள்ளுறதுக்கும், அதை நியாயப்படுத்துறதுக்கும் ஏற்ற மாதிரி கதையும் புனைஞ்சு குடுத்துப்போட்டு சுழிச்சுக்கொண்டு வன்னிக்கை உள்ளட்டு அடுத்த ராக்கெட்றுக்கும் குறிவைச் பாவம் போராட்டத்திற்காக என்னோட வந்து பாதிக்கப்பட்வன்கள் என்ற நினைப்பு அண்டைக்கு உங்களுக்கு வராமல் உங்கடை கண்ணை மறைச்சது எது? அன்றைக்கு செயலாளர் நாயகமாவதற்காக வவுனியாவில் காங்கிரஸ் இப்போது கூட்டமைப்பிற்குள் முக்கியத்துவம் பெறுவதற்காக 34 வது மாநாடு வவுனியா காங்கிரசில் அமைக்கபட்ட மத்திய கமிட்டி எங்கே? அந்த மத்திய கமிட்டியில் எத்தனை பேர் நீங்கள் செல்லும் போராட்டத்தால் பாதிக்கப்பட் தோழர்களின் வாழ்வுக்காய் துரும்பை கிள்ளிப்போட்டவை ? அவையில எத்தினை பேர் இப்போ நடந்து முடிந்த மாநாட்டிலை வந்து மக்களிரை தோழர்களின்ரை பிரச்சினையள் பற்றி கதைச்சவை? வரிசத்தை எண்ணிச் சொன்னா போதுமே 34 வருசத்திலயும் கூட வந்தவன் எத்தினை பேர் இருக்கிறான் எண்டதும் முக்கியம் கண்டியளோ " - டப்ஹ ஜஉல்ழ்ப்ச்
"தனிப்பட்ட முறையில் நாம் இந்த விவாதத்தை நடத்தினாலன்றி முகப்புத்தகத்தில் பகிரங்கமாக விவாதம் நட்த்துவதனால் தாங்கள் அதனால் பாதிக்கப்படலாம் என்ற ஜதார்த்த நிலையும் நாம் அறிவோம்.
 
எனவே உண்மையில் நீங்கள் பல விடயங்கள் பற்றி அறிந்திருக்க மாட்டீர்கள் என்றும் சொல்வதற்கில்லை மற்றவர்களின் ஆதங்கமும் அதுவே. நாம் உண்மைகளை மறைக்க முற்படும்போது எம்முடன் இருந்த இல்லாமல் போன, காணாமல்ப் போன. மற்றும் தற்போதும் ஒரு நல்ல ஆரோக்கியமான அரசியல் தீர்வை எட்டுவதற்காகவும் தங்களின் கடந்தகால அர்ப்பணிப்புகளுக்கும் இழப்புகளுக்கும் பிராயச்சித்தமாகவேனும் தங்கள் அனைவரின் கனவுகளும் ஓரளவுக்கேனம் நிறைவேற்றப்பட வேண்டும் என தங்களை அர்ப்பணித்து செயற்பட்டு வரும் இலங்கையில் மட்டுமல்லாது புலம் பெயர்ந்து வாழும் ஆயிரக்கணக்கான தோழர்களின் ஆன்மாக்களையும் தற்போதுள்ளவர்களின் மனங்களையும் புண்படுத்தும் பரீட்சித்துப் பார்க்கும் ஒரு விபரீதமான செயலாகவே எமக்குத் தோன்றுகிறது. இங்கே ஒற்றுமையென்பதோ இணக்க அரசியல் என்பதோ யாரோடு யார் ஒற்றுமைப் படுவது? அல்லது இணங்கிப்போய் வேலைசெய்வது? இதில் எந்தப் பக்கம் தவறிருக்கிறதென்று உண்மையில் உங்களுக்குத் தெரியாதா? அல்லது சொல்லவில்லையா? நாம் போராடப் புறப்பட்டதன் ஆரம்ப நோக்கம் இலட்சியம் எல்லாமே வேறு, ஆனல் நாம் சற்றும் எதிர்பார்க்காத தற்போதைய சூழல் வேறு. ஆனால் நோக்கங்களை வேறு திசையில் மாற்றியமைத்து திசை திருப்பி விட்டுக் கைவிட்டுப்போனவர்கள் யார்? எனவே யாருக்கும் எந்த வரலாறும் தெரியாதென்று நீங்கள் நினைத்தால் அது தவறு. தோழர் ரொபேர்ட்டின் மரணத்திற்குக் கூட (இலங்கையில் இருந்துகொண்டே) வராது விட்ட சிலரின் நேர்மைபற்றியும் தோழமை பற்றியும் நாம் அறிவோம. இவர்கள் யாருக்கு மண்டியிட்டார்களோ அவர்களின் துப்பாக்கி முனைக்குப் பயந்தே பலர் இதனைத் தவிர்த்துக்கொண்டார்கள். இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு விடயம் “சொத்துக்களை சுருட்டிய புலுடாக் கதைகளை எவ்வளவு காலம் பேசுவீர்கள், அவன் சொத்துக்களைச் சுருட்டிக்கொண்டு நாட்டை விட்டு ஓடவில்லையே!” என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆகவே நாம் இந்த விவாதத்துக்கு வராது விட்டாலும் சொத்துக்கள் சுருட்டப்பட்டது என்ற விடயத்தை நீங்கள் ஏற்றுக்கொள்வது போலவே தெரிகிறது. இருந்தாலும் நாட்டைவிட்டு ஓடவில்லை என்பதுதான் உங்கள் வாதமா? இதில் உண்மைகள் வெளிப்படவேண்டுமென்றால் நாம் தனிப்பட்ட முறையில் நேரில் சந்திக்கலாம் விவாதிக்கலாம். அது நேர்மையாகவும் இருப்பதோடு அறியாமையினால் உள்ள கருத்து முரண்பாடுகளை தெளிவபடுத்தவும் உதவும் என நம்புகின்றேன் மேலும் தற்போது உங்கள் ஸ்ருதி குறைந்துகொண்டே போகின்றது போலத் தெரிகின்றது எனவேதான் நான் உங்களை நம்புகின்றேன். -  ஈங்ஸ்ஹள்ங்ங்
 
ஒரே இலட்சியத்திற்காக, ஓரே நோக்கத்தோடு செயற்பட்டு தமது உயிரை அர்ப்பணித்த தோழர்களாகட்டும், உயிர் பிழைத்திருக்கும் தோழர்களாகட்டும் தேவைப்படும் போது அரவணைப்பதும், தேவை முடிந்ததும் உதாசீனப்படுத்துவதும் அல்லது கண்டும்காணாமல் விட்டுவிடுவது, களட்டிவிடுவதும் தோழர்களை உள்ளன்போடு நேசிப்பவர்களின் செயல் அல்ல. தோழமையும் அல்ல. தோழர்களையே தமது தேவைகளுக்காக மட்டும் பயன்படுத்த நினைப்பவர்கள் சமூகத்தையும், மக்களையும் எங்கனம் நேசிப்பார்கள்? அவர்கள் படைக்கும் புதுயுகத்தின் இலட்சணம் எப்படியிருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? –ஙர்ட்ஹய்
ஈழத்தில் களம் கண்டிருந்த தோழர்களின் கருத்து மோதலை இந்திய மண்ணிலிருக்கும் நான் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். எனினும்.....
சுரேஷ் பிரேமச்சந்திரனின் மேற்படி அறிக்கை எனக்கு நம்பிக்கையை ஊட்டுகின்றது. ஏறத்தாழ 20 ஆண்டுகள் ஜீவா முழக்கம் இதழில் ஈழ அரசியல் குறித்த எளிய கட்டுரைகள் எழுதி வந்தவன் என்ற முறையில் நாபாவின் மரணத்துக்குப் பிறகான உடதகஊ அமைப்பின் மீதான பார்வையில் எனக்கு விமர்சனங்களும் மாறுபாடுகளும் கூட உண்டு. ஆனால் தேசிய இடதுசாரி சக்திகளுடனான வலுவான உறவே ஈழத் தமிழர்க்கு நன்மை விளைக்கும் என்கிற சுரேஷ் பிரேமச்சந்திரனின் தற்போதைய நிலைப்பாடு மிக சரியானது என்பதில் எந்த ஐயமும் இல்லை கொள்கை வேறுபட்ட ஆனால் நாட்டு நலனில் அக்கறையுள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணைவது எப்போது அவசியம். இதை வரலாறு நெடுக சொல்லி வழிகாட்டியிருக்கிறது, நம் அண்மைக்கால தலைவர்களான யாசர் அரபாத்தும் மண்டேலாவும் இதை நிறுவியிருக்கிறார்கள். வன்முறை எப்போதும் வெல்லாது என்பதை நிறுவியிருக்கும் பிரபாகரனின் நடவடிக்கைகளிலிருந்து மேலும் கற்றுக் கொள்கிறோம்... சுய கோப தாபங்கள் விடுக்கப்படவேண்டிய நேரம் இது என்றே தோன்றுகிறது....சிக்கல்களிலிருந்து மீள்வோம். மேலும் சிக்கலுக்குள் ஆட்பட்டு மண்டை உடையவேண்டாம்.  - தஹற்ட்ஹய் இட்ஹய்க்ழ்ஹள்ங்ந்ஹழ்
 
தேசிய இடதுசாரி சக்திகளுடன் வலுவான உறவு என்பது தற்போதைய நிலைப்பாடு அல்ல. ஈபிஆர்எல்எவ் இன் நிலைப்பாடே அதுதான். இடையில் புலிகளுடனும் உறவு வைத்துக்கொண்டு தேசிய இடதுசாரிகளுடனும் உறவு வைத்துக்கொள்ள சிலருக்கு முடியாமல் போனாலும். ஈபிஆர்எல்எவ் இன் ஆரம்பகால நிலைப்பாடு தொடர்ந்து பேணப்பட்டே வந்தது. 
இன்று இடதுசாரிகளுடன் ஐக்கியம் பற்றி பேசினால் நல்லவிடயம் தான் ஆனால், அதற்கு முன் தமிழ் அரசியல், சமூக சக்திகள் மத்தியில் ஐக்கியத்திற்கான வழிகளை மூடிவிட்டு தேசிய இடதுசாரிகளுடன் ஐக்கியம் என்ற நிலைப்பாட்டில் சில தனிப்பட்ட நலன்களை முன்னிட்டே கூறப்படுகிறது. இதனை வேறொரு சூழலிலிருந்து விளங்கிக்கொள்வதில் உங்களுக்கு சிரமம் இருக்கலாம். -  ரதன்
 (தோழர்கள்)

No comments:

Post a Comment