Tuesday, August 5, 2014

பிரதம செயலாளருக்கு அதிகாரமிடும் உரிமை (புலி பினாமி) முதலமைச்சருக்கு இல்லை!

Tuesday, August 05, 2014
வடமாகாண பிரதம செயலாளர் விஜயலக்ஷ்மி ரமேஷை நியமித்தல், இடமாற்றம் செய்தல், அகற்றுதல் ஆகியவற்றுக்கான அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது.
 
மாகாணத்தின் சிறந்த எதிர்காலத்துக்காக முதலமைச்சரும், பிரதம செயலாளரும் ஒத்துழைப்புடனும் சமாதானத்துடனும் பணியாற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
 
அரச ஊழியர் என்ற வகையில் திருமதி விஜயலக்ஷ்மி ரமேஷ் அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்குள் அடங்கு வதாகவும் உச்சநீதிமன்றம் உறுதிப் படுத்தியது.
 
வடமாகாண சபையின் பிரதம செயலாளருக்கு அதிகாரம் இடும் உரிமை மாகாண முதலமைச்சருக்கு இல்லையென உச்சநீதிமன்றம் தெரிவி த்துள்ளது. பொதுச் சேவைகள் ஆணைக் குழுவுக்கே பிரதம செயலாளருக்கான கட்டளைகளைப் பிறப்பிக்க முடியும் என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
 
வடமாகாண சபையின் நிர்வாக செயற்பாடுகளில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலையிடுவதாகக் கூறி வடமாகாண சபையின் பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஷ் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுமீது வழங்கிய தீர்ப்பிலேயே உச்சநீதிமன்றம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
 
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியரசர்கள் கே.ஸ்ரீபவன் மற்றும் ரோஹினி மாரசிங்க ஆகிய உச்சநீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய குழு முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
 
பிரதம செயலாளரை அலுவலகத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் அகற்றுவதற்கும், தனது அனுமதியின்றி செயலாளர் வெளியில் செல்லமுடியாதென்றும் வடமாகாண முதலமைச்சர் சுற்றுநிருபமொன்றை வெளியிட்டிருப்பதாக இந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இந்த மனு மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. மாகாண சபை செயற்பாடுகளை திறம்பட முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் இரு தரப்பினரும் இணைந்து செயற்படுவதாக வடமாகாண முதலமைச்சர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தில் அறிவித்தார்.
 
நிபந்தனைகள் இன்றி சுற்றுநிருபத்தை வாபஸ் வாங்குவதாக முதலமைச்சர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனக ஈஸ்வரனும் எம்.ஏ.சுமந்திரனும் கடந்த 28ஆம் திகதியன்று நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தனர்.
 
மனுமீதான மேலதிக விசாரணையின்றி நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. பிரதம செயலாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கொமின் தயாசிறி, சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரீன் புள்ளே ஆகியோர் ஆஜராகினர்.

No comments:

Post a Comment