Friday, August 1, 2014

அமெரிக்கத் தூதரகம் பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாக அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது!

Friday, August ,01, 2014
இலங்கை::அமெரிக்கத் தூதரகம் பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
 
இலங்கையின் அடிப்படைக் கொள்கைகள் தொடர்பில் அமெரிக்க தூதரகத்தின் நிலைப்பாடு ஒரே விதமாக அமையவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்கத் தூதரகத்தின் நடவடிக்கைகள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் ஊடக சுதந்திரம் தொடர்பில் அமெரிக்கா கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் ஊடக அடக்குமறைகள் தொடர்பில் கருத்து வெளியிட்டு வருவதாகவும் வெளிவிவகார அமை;சசு அறிவித்துள்ளது. எனினும், ஊடக அடக்குமறைகள் தொடர்பில் அமெரிக்க தூதரகம் இலங்கையுடன் தகவல்களை பரிமாறிக்கொள்ள தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஊடக அறிக்கைளை வெளியிடுவதுடன் அமெரிக்காவின் சரிசனை முடிமுவுக்கு வந்து விடுவதாகத் தெரிவித்துள்ளது. பக்கச்சார்பற்ற விதத்தில் கருத்தக்களை வெளியிடாது அமெரிக்கத் தூதரகம் ஒரு பக்கச்சார்பான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தினால் அளிக்கப்படும் பதில்கள் தொடர்பில் அமெரிக்கா கருத்திற்கொள்ளாமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரகத்தின் நடவடிக்கைகள் ஒருபக்கச் சார்பாக அமைந்துள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment