Friday, August ,01, 2014
கோவை::நித்தியானந்தா சென்னையில் கடந்த 2011ம் ஆண்டு பத்திரிகையாளர் சந்திப்பின் போது இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மனைவி வேற்று மதத்தை சார்ந்தவர். அவரால் அவரது மனைவியை இந்து மதத்தை சேர்ந்தவராக தேர்ந்தெடுக்க முடியவில்லை. இந்த நிலையில் அவர் எப்படி இந்து மதத்தை காப்பாற்றுவார் என பேசியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கோவை கோர்ட்டில் நித்தியானந்தா மீது ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு கடந்த 14.7.2011 அன்று அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று நீதிபதி ரேணுகா முன்பு விசாரணைக்கு வந்தது. அ
ர்ஜூன் சம்பத் தரப்பில் வக்கீல் ஜெயசந்திரன் ஆஜராகி வாதாடினார். அப்போது நீதிபதி ரேணுகா வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள முகாந்திரம் இருப்பதால் நித்தியானந்தா வருகிற 3.9.2014 அன்று கோவை கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். நித்தியானந்தாவுக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.
No comments:
Post a Comment