Monday, August 11, 2014
வருடத்தில் முதல் 6 மாத காலப்பகுதியில் எயிட்ஸ் நோயாளர்களின் அதிகரிப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய பாலிய மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த வருடத்தின் முதல் ஆறு மாத காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது 20 சதவீத அதிகரிப்பாக தற்போது காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1989ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலான காலப்பகுதியில் எயிட்ஸ் தொற்றாளர்கள் 1950 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 320 பேர் இறந்துள்ளனர்.
தற்போது
சுமார் 1500 பேர் வரையில் எஸ் ஐ வி தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும்
நிலையில், மேலும் 1500 தொடக்கம் 3000 பேர் வரையில் எச் ஐ வி தொற்று அறியாத
நிலையில் சமூகத்தில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment