Sunday, July 27, 2014

கரையோரப் பாதுகாப்பு உச்ச அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது!

Sunday, July 27, 2014
கரையோரப் பாதுகாப்பு உச்ச அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
 
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி பாரியளவில் போராட்டமொன்றை நடாத்த உள்ளதாக தமிழக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆயிரக் கணக்கான மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க உள்ளதாகவும், இலங்கையிடம் புகலிடம் கோர உள்ளதாகவும் எச்சரித்திருந்தனர்.

எனினும், கரையோரப் பாதுகாப்பு உச்சளவில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளா கோசல வர்னகுலசூரிய தெரிவித்துள்ளார். இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 24 மணித்தியாலங்களும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
 

No comments:

Post a Comment