இந்தியாவிற்கு எதிராக சீனாவைப் பயன்படுத்திக்கொள்ள முடியாது என பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான சர்வதேச நிபுணத்துவ பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடான உறவுகள் குறித்து இலங்கை கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
புதிதாக இந்தியாவில் ஆட்சி அமைத்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி, சீனாவுடன் சுமூகமான உறவுகளைப் பேணவே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் சம அளவிலான இடைவெளியை பேணும் வகையில்; வெளியுறவுக் கொள்கைகள் வகுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் இந்தியாவை ஆத்திரமடையச் செய்யும் வகையில் இலங்கை நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா எதிர்க்கும் போதெல்லாம் சீனா உதவிக் கரம் நீட்டு;ம் என்பது சாத்தியமாகாது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment