Sunday, July 27, 2014

காதோடு காதாக......அனந்தியை காப்பாற்றிய பொலிஸாரும் படையினரும்!!

Sunday, July 27, 2014
* அனந்தியை காப்பாற்றிய பொலிஸாரும் படையினரும்
 
சனம் வளைத்துப் பிடிக்க தப்பித்தேன், பிழைத்தேன் என முல்லைத்தீவு வீதியில் அனந்தி ஓடிய ஓட்டத்தை மைதானத்தில் ஓடியிருந்தால் நிச்சயம் அவரை எவருமே வென்றிருக்க முடியாது. நெஞ்சை நிமிர்த்தி நின்று பதில் கூறியிருந்தால் அந்த அப்பாவி மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பர். ஏதோ பொலிஸாரும், இராணுவத்தினரும் அங்கு நின்ற படியால் காப்பாற்றி அனுப்பி வைத்துவிட்டனர். ஆமிக்காரனே வெளியேறு என இனியாவது கோஷமிடாது இருந்தால் சரி.
 
* அரச சுகபோகங்களை அனுபவிப்பது மு. கா. வா? தமிழ் கூட்டமைப்பா?
 
சுகபோகங்களுக்காக முஸ்லிம காங்கிரஸ் அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறதாம். சொல்பவர் ஐயா சம்பந்தன் அவர்கள். மு. கா. சுகபோகத்தை அனுபவிக்குதோ இல்லையோ தெரியாது, அப்படியே அனுபவித்தாலும் அரசிற்கு ஆதரவளித்துக் கொண்டிருப்பதால் அதில் தவறில்லை. ஆனால் ஐயாவும். ஐயாவின் கட்சி ஆட்களும் அரசிற்கு எதிராக நடந்து கொண்டே அரசின் சகல சுகபோகங்களையும் குறைவில்லாது அனுபவிக்கின்றனர். இல்லாவிட்டால் வடக்கு முதல்வருக்கு ஒன்றரைக் கோடியிலும், அமைச்சர்களுக்கு முக்கால் கோடியிலும் அதிசொகுசு வாகனங்கள். சொகுசு குடிமனைகள். பாதுகாப்பிற்கு பொலிஸார் எனக் கிடைக்குமோ? எம். பிமாருக்கு இதை விடவும் மேல் மற்றவர்களைப் பார்த்து அறிக்கை விடுவோர் தமது நிலையையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
 
* என்னதான் இருந்தாலும் மனோவால்
தம்பிக்கு நிகராக முடியாது
 
மலையக மக்களை ஒதுக்கி வைத்துவிட்டு தமிழர் தேசிய பிரச்சினை தீர்வு பற்றிப் பேச முடியாது என யாழ்ப்பாணத்தில் ஈ. பி. ஆர். எல். எப். மேடையில் மனோ கணேசன் போட்ட குண்டு ரி. என். ஏ. காரருக்கு முகச் சுழிப்பை ஏற்படுத்தியுள்ளதாம். அண்ணர் மனதில் எதையோ வைத்துக்கொண்டுதான் டீசல் அடித்து வந்து வடக்கு ஆர்ப்பாடங்களில் அக்கறையாக கலந்து கொள்கிறாரோ எனவும் தமக்குள் முணுமுணுத்தனராம், நாங்கள் பிரித்துப் பார்த்ததே கிடையாது. அப்படியிருக்க இவர் ஏன் இப்படித் திடீரென பிரித்துப் பேசுகிறார் என்றனராம். என்னதான் இருந்தாலும் மலையகத் தம்பி ஆறுமுகனின் அரசியல் முதிர்ச்சி இவருக்கு வரவே வராது என்ற முடிவிற்கு ரி. என். ஏ. காரர் வந்துவிட்டனராம். அதாவது அவர்களது பிரச்சினையைத் தீர்க்கும் வல்லமை அவர்களிடம் இருக்கிறது, நாம் எமது மக்களின் பிரச்சினைகளில் அக்கறை செலுத்துவோம் எனத் தம்பி தனது பேரன் போல் அண்மையில் கூறியிருந்தார்.

No comments:

Post a Comment