Tuesday, July 01, 2014
பாக்தாத்::ஈராக் மற்றும் சிரியாவில் தாங்கள் கைப்பற்றியுள்ள பகுதிகளை இணைத்து புதிய இஸ்லாமிய நாடு ஒன்றை தீவிரவாதிகள் அறிவித்தனர். இதன் தலைவராக அபு பக்கீர் அல் பகாதி என்பவரையும் அறிவித்துள்ளனர்.ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும், ராணுவ படையினருக்கும் இடையே சண்டை வலுத்து வருகிறது. மேலும், அங்கு சிக்கி தவிக்கும் ஏராளமான இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் வெளியேறி வருகின்றனர். சண்டை நடக்கும் பகுதிகளில் இருந்து சுமார் 600 இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர சிறப்பு விமானங்களை இந்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
இதற்கிடையே, சிரியாவின் அலெப்போ பகுதி முதல் ஈராக்கின் தியாலா நகரம் வரை தங்களது கட்டுப்பாட்டில் வந்து விட்டதாக தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் பேஸ்புக்கில் வெளியிட்டிருந்த செய்தியில், ‘எங்கள் பிடியில் சிக்கியுள்ள பிராந்தியம் சுதந்திர இஸ்லாமிய நாடாக செயல்படும். அதன் தலைவராக அபுபக்கர் அல் பகாதி இருப்பார். இங்கு இருக்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை இந்த ஆட்சியின் கீழ் கட்டுப்பட்டு இயங்க வேண்டும். இங்கு முழுமையான இஸ்லாமிய சட்டம் நடைமுறையில் இருக்கும். ஜனநாயக நடைமுறைகளோ, மேற்கத்திய நடைமுறைகளோ அனுமதிக்கப்படமாட்டாது’ என்று அறிவித்துள்ளனர். இதற்கு ஈராக்கில் ஒரு பகுதியில் வசிக்கும் சன்னி முஸ்லிம்கள் ஆதரவு தெரிவித்து பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இந்நிலையில், சதாம் உசைனின் சொந்த ஊரான திக்ரித்தை ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தி கைப்பற்றியது. திக்ரித்தில் சதாம் உசைன் வசித்த மாளிகை குண்டு வீச்சில் தகர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அங்கு பல்கலைக்கழகத்தில் முகாமிட்டிருந்த தீவிரவாதிகள் மீது நடத்திய தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் பல்கலைக்கழகத்தை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது.மேலும், பாக்தாத்தை நோக்கி முன்னேறிவரும் தீவிரவாதிகளை வீழ்த்த ராணுவத்தினருக்கு பிரதமர் நூரி அல் மாலிக்கி உத்தரவிட்டுள்ளார். ஈராக்கிற்கு உதவ அமெரிக்கா கூடுதலாக 1000 ராணுவ வீரர்களை போர்க்கப்பல் மூலமாக அனுப்பியுள்ளது.

No comments:
Post a Comment