Tuesday, July 1, 2014

ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைப் பேரவை விசா­ரணை நடத்­து­வது அவ­சி­ய­மற்ற ஒன்­றாகும்: ஐக்­கிய நாடு­க­ளுக்­கான இலங்­கையின் நிரந்­தர வதி­விடப் பிர­தி­நிதி கலா­நிதி பாலித்த கோஹன!

Tuesday, July 01, 2014
இலங்­கை::இலங்­கையில் மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­ற­தாகக் கூறி ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைப் பேரவை விசா­ரணை நடத்­து­வது முழு­மை­யாக அவ­சி­ய­மற்ற ஒன்­றாகும் என்று ஐக்­கிய நாடு­க­ளுக்­கான இலங்­கையின் நிரந்­தர வதி­விடப் பிர­தி­நிதி கலா­நிதி பாலித்த கோஹன தெரி­வித்­துள்ளார்.

ஐக்­கிய நாடு­களின் விசா­ரணை என்­பது முழு­மை­யாக வேண்­டப்­ப­டாத ஒன்­றாகும். இது மூன்றாம் உலக வறிய நாடு ஒன்று பயங்­க­ர­வா­தத்தைத் தோற்­க­டித்­த­மைக்­காக தண்­டிக்­கப்­ப­டு­வதைப் போன்­ற­தாகும் '' என்று பாலித்த கோஹன தெரி­வித்­த­தாக ஏ.எப்.பி. செய்தி சேவை தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை வெள்ளைக் கொடி விவ­காரம் குறித்து கருத்து வெளி­யிட்­டுள்ள பாலித்த கோஹன, புலிகள் எவ்­வாறு சர­ண­டை­ய­வேண்டும் என்­பது குறித்து ஐரோப்­பிய இடை­யீட்­டா­ளர்­க­ளுக்கு தான் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்­பி­ய­தா­கவும் எனினும் சர­ண­டைதல் குறித்த விவ­காரம் தொடர்பில் தான் அறிந்­தி­ருக்­க­வில்லை என்றும் கூறி­யுள்ளார் என ஏ.பி.செய்தி சேவை கூறி­யுள்­ளது.

குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­து­வது இல­கு­வா­ன­தாகும். ஆனால் அவற்றில் நம்­ப­கத்­தன்மை உள்­ளதா என்­பது வேறு விட­ய­மாகும்'' என்றும் பாலித்த கோஹன கூறி­யுள்ளார்

யுத்தம் முடிந்­த­போது இலங்­கையின் வெளி­வி­வ­கார செய­லா­ள­ராக கட­மை­யாற்­றிய பாலித்த கோஹன தற்போது நியுயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதியாக கடமையாற்றுகின்றார்.

No comments:

Post a Comment