Tuesday, July 01, 2014
பெங்களூர்::கொச்சியில் இருந்து டெல்லிக்கு சென்ற
விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் போன் வந்ததால், நடுவானில் பறந்த
விமானம் அவசரமாக பெங்களூரில் தரை இறக்கப்பட்டது.
நேற்று இரவு 9 மணிக்கு, கொச்சியில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இதில் 164 பயணிகள் பயணம் செய்தனர். டெல்லியில் நள்ளிரவில் தரை இறங்குவதாக இருந்த அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக, கொச்சி விமான நிலைய அதிகாரிகளுக்கு போன் மூலம் மிரட்டல் வந்தது.
இதையடுத்து இரவு 10 மணி அளவில் விமானம் பெங்களூர் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக இறக்கப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளே சென்று சோதனை நடத்தினார்கள். பல மணி நேரம் சோதனைக்குப் பின் அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை வெறும் புரளி என்று தெரியவந்தது, என்றாலும் பயணிகள் அதில் செல்லாமல் வேறு விமானத்தில் அதிகாலையில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மிரட்டல் விடுத்தது யார் என்று விசாரித்த போது, கொச்சி விமான நிலையத்துக்கு தனது காதலியை தேடி ஒருவர் வந்தார். அங்கு அவர் காதலியுடன் பேசினார். கொச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு கெடு பிடி காரணமாக அவர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.
காதலியை கண்டு பிடிக்க முடியாத கோபத்தில் அந்த நபர் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே கொச்சி விமான நிலையத்தக்கு தீவிரவாதிகள் மிரட்டல் வந்தது. தற்போது மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதால் கொச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment