Wednesday, July 23, 2014

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் தன்னிச்சையான நடவடிக்கைகள் எதனையும் எடுக்க முடியாது: சுப்பிரமணிய சுவாமி!

Wednesday, July 23, 2014
இலங்கை::இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணிய சுவாமி தலைமையிலான இந்திய தூதுக்குழு உறுப்பினர்கள் இன்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்து கலந்துரையாடினர.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சில்  (22) நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு பற்றி ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் இந்தியத் தூதுக்குழுவினரு பாதுகாப்பு அமைச்சன் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் தன்னிச்சையான நடவடிக்கைகள் எதனையும் எடுக்க முடியாது என்பதால் இலங்கை அது குறித்து அலட்டிக்கொள்ள தேவையில்லை என சுப்பிரமணிய சுவாமி அறிவுரை வழங்கியுள்ளார்.

விவசாய நிலங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வெருளிகள் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தை வர்ணித்துள்ள அவர் இலங்கை குறித்து ஏன்  அவர்கள் அக்கறை கொள்ளவேண்டும் அவர்கள் யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை விவகாரம் பாதுகாப்பு சபைக்குச் சென்றால் சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பாவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இது குறித்த கவலையடைய தேவையில்லை, நாங்கள் ஒரு போதும் சர்வதேச விசாரணைணை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகள் குறித்து அரசாங்கம் கவலை கொள்ள வேண்டியதில்லை என பாரதிய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஏனெனில், இலங்கை தொடர்பில் தன்னிச்சையான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் விசாரணைக்குழுவிற்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் அனுமதியுடனே நடவடிக்கைகள் எடுக்கப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இல்ஙகை தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அதற்கு சீனா எதிர்ப்பை வெளியிடும் எனவும் அதனால் இலங்கை கவலை கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை விவகாரங்களில் சர்வதேச சமூகத்தின் தலையீடுகளை நியாயப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment