Wednesday, July 23, 2014
திருகோணமலையில் விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியிருந்தார்.
உலகின் எந்தவொரு நாட்டின் மீதும் தாக்குதல் நடாத்த குறிப்பாக இந்தியா மீது தாக்குதல் நடாத்த, திருகோணமலை பயன்படுத்திக்கொள்ளப்பட மாட்டாது என வெளிவிகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
ஐந்து பில்லியன் ரூபா செலவிட்டு விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைக்க தி;ட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது குறித்த இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விமானப் பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பது தொடர்பில் சீனாவுடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் எந்த இடத்தில் விமான நிலையமொன்றை அமைப்பது குறித்த தீர்மானங்கள் இதுவரையில் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்டுநாயக்க, மத்தள மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றில் விமான பராமரி;ப்பு நிலையமொன்றை அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்ற போதிலும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து காரணிகளையும் கருத்திற் கொண்டே தீர்மானம் எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும், விமான பராமரிப்பு நிலையம் அமைப்பது இந்தியாவிற்கு எந்த வகையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சீன நிறுவனத்தினால் இலங்கையில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள விமான பராமரிப்பு நிலையம் குறித்து, இ;ந்தியா கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தம்மிடம் இது குறித்து வினவியதாகவும், எதிர்ப்பை வெளியிடவில்லை எனவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை::இந்தியா மீது தாக்குதல் நடாத்த இலங்கை களமாகப் பயன்படுத்தப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment