Monday, June 23, 2014

மட்டக்களப்பு சிவில் பிரசைகள் சபையின் ஆதரவில் வைத்திய,போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு கிள்மா கண்காட்சி! (photos)

Monday, June 23, 2014      
இலங்கை::மட்டக்களப்பு சிவில் பிரசைகள் சபையின் ஆதரவில் ஓட்டமாவடி அல்- கிமா நிறுவனத்தினால் நடத்தப்படும் முத்தகல் கிள்மா கண்காட்சி வைத்திய,போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு காட்சி நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை (21) மாலை மட்டக்களப்பு மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதி மற்றும் சவூதி அரேபிய தனவந்தரான அய்சேய்க் அபூ குசாம் உள்ளிட்டோரால் திறந்து வைக்கப்பட்டது.

அல்கிமா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.எஸ்.ஹாருன் சஹ்வி தலைமையில் நடைபெற்ற இவ் ஆரம்ப நிகழ்வில், மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் வ.கமலதாஸ், அல்கிமா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் சவூதி அரேபிய தனவந்தருமான அய்சேய்க் அபூ குசாம், சவூதி அரேபிய பாடகர்கள், ஓட்டமாவடி பிரதேச சபைத் தலைவர் கே.பி.எஸ்.ஹமீத், பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர், உள்ளிட்ட அதிதிகளும் கலந்து கொண்டனர்.
 
நேற்றைய முன் தினம், விசேடமாக அல் கிமா நிறுவனம் மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்டு வரும் பல்வேறு அபிவிருத்தி மனிதாபிமானப்பணிகள் தொடர்பான விவரணப்படக்காட்சிகள் காண்பிக்கப்பட்டதுடன், சிவில்; பிரஜைகள் சபையினால் மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட சமூக நல்லிணக்கம் தொடர்பான ஓவியப்போட்டியில் சிறந்த ஓவியங்களை வரைந்தவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.

அதே நேரம், அல்கிமா நிறுவனத்தின் பணிப்பாளரால் மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத்தளபதியிடம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் கையளிப்பதற்கான முஸ்லிம் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சினைகள், மற்றும் நல்லிணக்கத்துக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது.

அத்துடன் அல் கிமா நிறுவனத்தினால் வலது குறைந்த தமிழ் முஸ்லிம்களுக்கு 5 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டதுடன், கண்பார்வை குறைந்தவர்களுக்கான 300 மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. அதே போன்று இன்றைய தினமுமு; சக்கர நாற்காலிகள், வழங்கப்படவுள்ளது.

நேற்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஆரம்பமான இக்காட்சிக் களியாட்ட நிகழ்வில், புகைப்படக்கண்காட்சிகள், வாகனப் போக்குவரத்து தொடர்பான போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் விவரண நிகழ்வுகள், சிவில் பிரசைகள் சபை மற்றும் அல்கிமா நிறுவனங்களின் கூடங்கள், இராணுவத்தின் பொறியல் பிரிவின் காட்சிக்கூடம், சிறப்பு நாய்களைக் கொண்ட மிதிவெடி அகற்றும் பிரிவின் காட்சிகள், மருத்துவப்பிரிவு, கோள் மண்டலம், சுகாதார வைத்தியப்பிரிவின் காட்சிக்கூடம் அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்கள் தங்களுடைய மருத்துவப்பரிசோதனைகளைச் செய்து கொள்வதற்கான கூடங்கள், இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட அக்குப்பஞ்சர் வைத்தியருடைய வைத்திய கூடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கைப்பணிப் பொருள்கள் விற்பனைக் கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மாலை 4 மணிமுதல் இரவு 9 .30 மணிவரை நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு நாளை 23ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment