Monday, June 23, 2014
ராதாபுரம்::இடிந்தகரையில் அணு உலை ஆதரவு, எதிர்ப்பு கோஷ்டிகளுக்கு இடையே இன்று காலை மீண்டும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அங்கு பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.கூடங்குளத்தில் அணு மின் நிலையத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது. அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், உறுப்பினர் மைபா ஜேசுராஜ், புஷ்பராயன் உள்ளிட்டோர் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை இடிந்தகரையில் முன்னின்று நடத்தி வந்தனர்.
ராதாபுரம்::இடிந்தகரையில் அணு உலை ஆதரவு, எதிர்ப்பு கோஷ்டிகளுக்கு இடையே இன்று காலை மீண்டும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அங்கு பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.கூடங்குளத்தில் அணு மின் நிலையத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது. அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், உறுப்பினர் மைபா ஜேசுராஜ், புஷ்பராயன் உள்ளிட்டோர் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை இடிந்தகரையில் முன்னின்று நடத்தி வந்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் அவர்கள் ஊரை விட்டு வெளியேறி விட்ட நிலையிலும் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது.இதற்கிடையே, அணு உலைக்கு ஆதரவாக ஸ்டாலின் என்பவர் தலைமையில் மற்றொரு கோஷ்டியினர் செயல்பட்டு வருகின்றனர். அணு உலை ஆதரவு, எதிர்ப்பு கோஷ்டிகள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்துகின்றனர்.கூத்தங்குழியில் வசித்த அணு உலை ஆதரவு கோஷ்டியைச் சேர்ந்த சிலர் ஊரை விட்டு விலக்கி வைக்கப்பட்டனர். அவர்கள் இடிந்தகரை சுனாமி காலனியில் தங்கியிருந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் அங்கு ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த போது அவை திடீரென வெடித்துச் சிதறியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து கடற்கரை பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தி நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். இருப்பினும் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. நள்ளிரவு நேரங்களில் திடீர் திடீரென வெடிகுண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இதையடுத்து, நெல்லை கலெக்டர் தலைமையில் அமைதிக்குழு அமைக்கப்பட்டு இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக அவைகளை போலீசிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றும், யாரும் வெடிகுண்டுகளை பயன்படுத்தக் கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்கு இரு தரப்பினருமே சம்மதம் தெரிவித்தனர். இருப்பினும் நீறுபூத்த நெருப்பாக அவ்வப்போது மோதல் வெடித்தது.இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் இடிந்தகரையில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவைகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் ஆதரவு மற்றும் எதிர் தரப்பினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தனித்தனியே மனுக்கள் கொடுத்தனர்.
இதுதொடர்பாக ஆர்டிஓ தலைமையில் ராதாபுரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. இருப்பினும் இந்த பிரச்னைக்கு முடிவு ஏற்படவில்லை.அணு உலை ஆதரவு கோஷ்டியைச் சேர்ந்த செபஸ்தியான் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகை நேற்று முன் தினம் சிலர் சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று காலை 7.30 மணிக்கு இடிந்தகரை சவேரியார் கோயிலின் மேற்குப் பகுதியில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கோஷ்டிகள் திடீரென மோதிக் கொண்டனர்.இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். சுமார் 25க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டன. ஆனால், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உயிருக்கு பயந்து சிலர் படகுகளில் ஏறி தப்பி கடலில் தஞ்சமடைந்துள்ளனர்.நெல்லை எஸ்.பி., நரேந்திரன் நாயர் உத்தரவின் பேரில் வள்ளியூர் டிஎஸ்பி பாலாஜி தலைமையில் போலீசார் இடிந்தகரைக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆர்டிஓ, தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளும் அங்கு சென்று வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர்.
இந்த சம்பவத்தால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் கூடங்குளம், இடிந்தகரை பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அணு உலை அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.வெளியேறிய ஆதரவாளர்கள்: இதற்கிடையே, அணு உலை ஆதரவாளர்களில் சிலர் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ஒப்பந்த பணிக்கு சென்று வருகின்றனர். இவர்களுக்கு அணு உலை எதிர்ப்பாளர்கள் மிரட்டல் விடுத்ததால் அவர்கள் இடிந்தகரையிலிருந்து வெளியேறி பரமேஸ்வரபுரம், ராதாபுரம், உதயத்தூர் ஆகிய இடங்களில் குடியேறி வேலைக்கு சென்று வருகின்றனர்.
No comments:
Post a Comment