Monday, June 23, 2014

சட்ட விரோதமாக வைத்திருப் பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை: ஆயுதங்களை ஒப்படைக்கவும் : யாழில் இராணுவத்தினரின் சுவரொட்டி!

Monday, June 23, 2014      
இலங்கை::இராணுவத்தினர் பயன்படுத்தும் ஆயுதங்களைச் சட்ட விரோதமாக வைத்திருப் பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப் பட்டுள்ளன.
 
யாழ்ப்பாணத்தின் அச்சுவேலி, வலி.கிழக்கு மற்றும் வடமராட்சி ஆகிய பிரதேசங்களில் இந்தத் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஆயுதங்களை தம்வசம் வைத்திருப்பவர்கள் அதனை உடனடியாக அருகிலுள்ள இராணுவ முகாமிலோ அல்லது பொலிஸ் நிலையத்திலோ ஒப்படைக்க முடியும். அவ்வாறு இல்லாமல் தம் வசம் வைத்திருந்து பிடிக்கப்பட்டால் அவர்கள் பிணையில் வெளியில் வரமுடியாது தடுப்பில் வைக்கப்படுவார்கள் என அந்தத் துண்டுப்பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது.
 
மேலும், அவ்வாறு ஆயுதங்களை எங்காவது கண்டெடுத்தால் அல்லது வைத்திருப்பவர்களை அடையாளங்கண்டால் அல்லது எங்காவது ஆயுதங்கள் இருப்பது கண்ணுற்றால் அது தொடர்பில் இராணுவத்தினருக்கு தகவல் தெரிவிக்க முடியும்.
 
அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களுக்குச் சன்மானம் வழங்கப்படும் எனவும் அந்தத் துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment