Monday, June 23, 2014
ராமேஸ்வரம்::கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்கியதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவரின் படகு சேதமடைந்தது.
ராமேஸ்வரம்::கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்கியதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவரின் படகு சேதமடைந்தது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 53 மீனவர்கள் இலங்கை யாழ்ப்பாணம், அனுராதபுரம் மற்றும் திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நடுக்கடலில் கைப்பற்றப்பட்ட மீனவர்களின் 35 படகுகள் இலங்கை கடற்படையினரின் வசம் உள்ளன.
சிறையிலுள்ள மீனவர்கள் விடுவிக்கப்பட்டு வரும் நிலையில், படகுகளை விடுவிப்பது குறித்து இதுவரை இலங்கை அரசு எவ்வித உத்தரவாதமும் அளிக்கவில்லை. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகு உரிமையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். தங்கள் படகுகளை கடலுக்கு அனுப்ப தயங்கி வருகின்றனர். பெரும்பான்மையான படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் ராமேஸ்வரம் துறைமுக கடற்கரை யில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் 100க்கும் குறைவான படகுகளே கடலுக்கு சென்றன. அன்று மாலை கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். கற்களை வீசி எறிந்து மீனவர்களை தாக்கியுள்ளனர். இதில் மீனவர் ரொமோ என்பவரின் படகின் வீல் ஹவுஸ் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.
கடற்படையினர் நடவடிக்கைக்கு பயந்து, மீனவர்கள் பலர் நேற்று முன்தினம் இரவே கரை திரும்பினர்.இலங்கை கடற்படைக்கு பயந்து வேறு பகுதிகளுக்கு சென்று இரவு முழுவதும் மீன் பிடித்து திரும்பிய மீனவர்கள் சிலர், குறைந்த மீன்களுடன் நேற்று காலை ராமேஸ்வரம் திரும்பினர்.
No comments:
Post a Comment