Monday, June 23, 2014

தெற்கு சீனாவில் வெள்ளத்தில் சிக்கி 26 பேர் பரிதாப சாவு 8,700 வீடுகள் மூழ்கின!

Monday, June 23, 2014      
பீஜிங்::சீனாவின் தெற்கு பகுதியில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர். மேலும், ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.  சீனாவின் தெற்கு பகுதியான ஹுனான், ஜியாங்சி மற்றும் பியூஜியான் உட்பட 5 மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனால், பல்வேறு இடங்களில் கடும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி நேற்று ஒரே நாளில் 11 பேர் பலியாகி உள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போய்விட்டனர் என்று அப்பிராந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹுனான் மற்றும் ஜியாங்சி உட்பட 5 மாகாணங்களிலும் மழை வெள்ளத்தில் 8,700 வீடுகள் மூழ்கி விட்டன. வீடுகளை இழந்த ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மழை வெள்ளத்தில் 42 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் முற்றிலும் நாசமாகின. மழை வெள்ளத்தால் சுமார் ரூ.40 ஆயிரம் கோடி இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக என்று சீன உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment