Monday, June 02, 2014
இலங்கை::கிழக்கு மாகாணத்தில் புதிதாக ஸ்தாபிக்கபட்ட புதிய வீடமைப்பு அதிகார சபைக்கான பணிப்பாளர் சபைக்கான புதிய உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றுஞாயிற்றுக்கிழமை (01) அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இந்த நியமனங்களை வழங்கி வைத்தார்.
இதன் பொருட்டு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக மருமுனையைச் சேர்ந்த சட்டத்தரணி அமீருள் அன்சார் மௌலானாவும், பொது முகாமையாளாராக திருகோணமலையைச் சேர்ந்த (பணிப்பாளர் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சித் திணைக்களம் கி.மா) ஏ.எஸ்.எம்.பாயிஸ் ஆகியோருக்கும், பணிப்பாளர்களாக எஸ்.ஏ.எம். பௌஸ் (பொறியியலாளர்- திருகோணமலை), க.யோகவேல் (மட்டக்களப்பு), பிரசாந் வரணகுல (உகன), ஏ.கியாவுதீன் (அக்கரைப்பற்று), ஏ.எச்.எம்.அன்சார் (செயலாளர், வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சு கி.மா.), எஸ்.குமரகுரு (பிரதி பிரதம செயலாளர், நிதி கி.மா.), வீ.மகேந்திரராஜா (பிரதி பிரதம செயலாளர் நிதி கி.மா), கே.வேல்மாணிக்கம் (பணிப்பாளர் மாகாண கட்டட திணைக்களம்)
மேல் மாகாணத்தில் இவ்வாறு வீடமைப்பு அதிகார சபையொன்று ஏற்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயற்பட்டு வருவதாக கிழக்கு மாகாணம் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தொவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் கடந்த யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வீடமைப்பு வசதிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதனையடுத்து அதனை மீளக்கட்டியெழுப்பும் பொருட்டு கிழக்கு மாகாணத்திற்கான புதிய வீடமைப்பு அதிகார சபையொன்றை அமைப்பதற்கான நடவடிக்கையையை கிழக்கு மாகாண சபை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் உதுமாலெப்பை இதன்போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment