Monday, June 02, 2014
இலங்கை::இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் தன்னுடன் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்லாது அது தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் அனுப்பியிருந்த பதில் கடித மும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வழமை போன்று விடுத்த அறிக்கையும் இவர்களது உண்மையான சுயரூபம், ஆற்றலும் விவேகமும் இல்லாத அரசியல் தலைமை, அவர்களது அகம்பாவம் என்ப வற்றை முழு உலகிற்குமே தெளிவாக வெளிக்காட்டியது.
இலங்கை::இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் தன்னுடன் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்லாது அது தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் அனுப்பியிருந்த பதில் கடித மும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வழமை போன்று விடுத்த அறிக்கையும் இவர்களது உண்மையான சுயரூபம், ஆற்றலும் விவேகமும் இல்லாத அரசியல் தலைமை, அவர்களது அகம்பாவம் என்ப வற்றை முழு உலகிற்குமே தெளிவாக வெளிக்காட்டியது.
நாட்டின் ஜனாதிபதிக்கு நிகரானதொரு பதவியைத் தாம் வகிப்பதாகவும், ஜனாதிபதி போன்றதொரு
மக்கள் தலைவராகவும் தம்மை எண்ணிச் செயற்பட்டுவரும் வட மாகாண முதலமைச்சரும், இரா.
சம்பந்தனும் இவ்வாறு தாங்கள் நடந்து கொண்டதன் மூலமாக தமது அரசியல் காய்நகர்த்தலானது
இந்தியாவின் புதிய அரசாங்கத்திடம் மேலோங்கும் எனவும், புதிய பிரதமர் தமக்கு
நேரடியாக அழைப்பு விடுப்பார் எனவும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர்களது
எதிர்பார்ப்பு எதுவுமே நிறைவேறவில்லை.
ஜனாதிபதியின் அழைப்பை ஏற்காமை மூலமாக இவர்கள் தமக்குள் அதனைப் பெருமையாக எண்ணிச்
செயற்பட்டமை இவர்களது அறியாமை யையும், உண்மையான சுயரூபத்தையும், விட்டுக் கொடுக்காத
அகம்பாவப் போக்கையும் இன்று புதிய இந்தியத் தலைமையிடம் எடுத்துக் காட்டிவிட்டது.
ஒரு நாட்டின் தலைவரது அழைப்பிற்கு இவர்கள் நடந்து கொண்ட முறையை வைத்தே இந்தியாவின்
புதிய பிரதமர் தமிழ்க் கூட்டமைப்பினரைப் பற்றி நிச்சயம் நல்லதோர் எடை
போட்டிருப்பார்.
இத்தகைய கடும் போக்குடைய தமிழ்த் தலைமை எவ்வாறு தமது நாட்டு அரசாங்கத்துடன்
பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணப் போகிறார்கள் என்பதை புதிய பிரதமர் நரேந்திர
மோடி நன்கு விளங்கிக் கொண்டிருப்பார். அதேசமயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்
நல்லெண்ணத்தையும் அவர் முழுமையாகப் புரிந்து கொண்டிருப்பார். இவ்விடயத்தில்
உண்மையில் ஜனாதிபதி வெற்றி கண்டுள்ளார். ஜனாதிபதி விடுத்த அழைப்பினை ஏற்று அவருடன்
சென்று தமது நல்லெண்ணத்தைக் காட்டி காரியத்தைச் சாதிப்பதை விடுத்து அதற்கு
வியாக்கியானம் கற்பிக்க முனைந்து இன்று தமிழ்க் கூட்டமைப்பு மூக்குடைபட்டு
நிற்கின்றது.
தற்போது இந்தியப் பிரதமர் சந்திப்பதற்கு யாரிடம் உதவி பெறலாம் என்று கட்சிக்
கூட்டத்தில் வைத்து தலைவர் சம்பந்தன் சக உறுப்பினர்களிடம் கேட்கும் அளவிற்கு நிலைமை
வந்துள்ளது. தமிழ்நாடு சென்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவையே சந்திக்க முடியாத
நிலையிலிருந்து கொண்டு பாரதப் பிரதமர் தமக்கு அழைப்பு விடுப்பார் என
எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஜனாதிபதி ஏற்படுத்திக் கொடுத்த சந்தர்ப்பத்தை
இவர்கள் முறையாகப் பயன்படுத்தியிருந்தால் தமிழ்க் கூட்டமைப்பு மீது இந்தியாவின்
புதிய அரசாங்கத்திற்கு ஒரு நன்மதிப்பு ஏற்பட்டிருக்கும்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியுடன் சென்றால் அதனால் அரசாங்கம் நன்மை
பெற்றுவிடும் என்பது போல அறிக்கை விட்டவர்கள் இன்று இலவு காத்த கிளி போல
அழைப்பிற்காகக் காத்திருக்கின்றனர். தமது அகம்பாவத்தினாலும், விவேகமும் ஆற்றலும்
இல்லாத அரசியல் ஆளுமை யாலும் தலைகுனிந்து நிற்கின்றனர். தாம் மட்டுமல்லாது வட
பகுதித் தமிழ் மக்களையும் இவர்கள் தலைகுனிய வைத்துள்ளனர். இன்றும் விழுந்தவன்
மீசையில் மண் படாத கதையாக இது தமக்குக் கிடைத்த வெற்றி என்பது போலவே இவர்கள் மக்களை
ஏமாற்றி வருகின்றனர்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியுடன் கூடச் செல்லாமையினால் ஜனாதிபதிக்கு
ஒருவிதமான குறையும் ஏற்டவில்லை. மாறாக அங்கு எதிர்பார் த்ததை விடவும் அமோக வரவேற்பு
கிடைத்தது. இந்திய ஊடகங்களில் எமது ஜனாதிபதியே அதிமுக்கியத்துவம் பெற்றிருந்தார்.
தமிழ்நாட்டில் எத்தனையோ கூச்சல் போட்டார்கள். ஆனால் அவற்றுக்கு தமிழக ஊடகங்களே தமது
எதிர்ப்பை வெளியிட்டன. வைகோ டில்லியில் கறுப்புக் கொடி காட்டி ஆர்ப் பாட்டம்
செய்தார். எவருமே கண்டு கொள்ளாத நிலையில் பொலிஸாரினால் விரட்டப்பட்டு கைது
செய்யப்பட்டார்.
ஜனாதிபதி தனது சாணக்கியத்தினால் நல்லெண்ணத்தைக் காட்டுமுகமாக இலங்கையில் தடுத்து
வைக்கப்பட்டிருந்த அனைத்து இந்திய மீனவர்களையும் விடுவித்தார். அங்கு சென்றிருந்த
போது புதிய பிரதமருடன் சுமார் அரை மணி நேரம் மீனவர் பிரச்சினை உட்பட பல விடயங்கள்
தொடர்பாக கலந்துரையாடினார். எமது ஜனாதிபதியின் நல்லெண்ணத்திற்குப் பிரதி உபகா ரமாக
இந்தியாவிலுள்ள எமது நாட்டு மீனவர்களை விடுவிக்க அங்கு நடவ டிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் வடபகுதி மீன வர்கள், உண்மையில்
முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியுடன் கூடவே சென்று செய்திருக்க வேண்டிய விடயம்
இது.
உண்மையில் தமிழ்க் கூட்டமைப்பு இவ்விடயத்தில் சாணக்கியமாக நடந்தி ருக்க வேண்டும்
என்பது பொதுவாக தமிழ்ப் புத்திஜீவிகளின் கருத்தாக இருப்பதைக் காண முடிகிறது.
முப்பது வருட கால பயங்கரவாதப் போராட்டத் தினால் பாதிக்கப்பட்டு சலிப்படைந்து
வெறுப்புற்றிருக்கும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வினைக் காண தமிழ்க் கூட்டமைப்பு
முன்வர வேண்டும் அல்லது தீர்வைக் காணுமாறு அரசாங்கத்திடம் கூறிவிட்டு ஒதுங்கிக்
கொள்ள வேண் டும். யுத்தம் முடிவடைந்து இன்று ஐந்து வருடங்கள் கடந்த நிலையிலும்
தீர்வில் ஒருசிறு முன்னேற்றமும் காண முடியாத நிலைக்கு இந்தத் தமிழ் கூட்டமைப்பே
காரணமாக இருந்து வருகிறது.
அரசாங்கத்தை குறை கூறுவது மட்டுமே இவர்களது செயலாக
உள்ளது. புலிகள் தமிbழம் காணப்போவதாக முப்பது வருடமாகப் போராடினார்கள். கண்ட பலன்
எதுவுமில்லை. இப்போது ஐந்து வருட அரசியல் தீர்வு காண்பதாக தமிழ்க் கூட்டமைப்பு
போராடுகிறது. இது இன்னமும் எத்தனை வருடங்கள் தொடரப் போகின்றதோ தெரியவில்லை.
இந்நிலையில் அப்பாவித் தமிழ் மக்களே ஏமாற்றப்படுகின்றனர். தமிழ்க் கூட்டமைப்பினர்
ஒன்றை மட்டும் விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது இனிவரும் காலத்தில் இந்த அரசாங்கமே
தொடர்ந்தும் ஆட்சியில் இருக்கப் போகின்றது. அதிலும் பாராளுமன்றத்தில் சாதாரண பலத்தை
விடவும் மூன்றில் இரண்டு பெருபான்மைப் பலத்தை கொண்டிருக்கிறது. அதனால் ஆட்சி
மாறும், பிரச்சினைகளைத் தீர்க்கலாம் எனக் கனவு காண்பது என்பது நடை பெறாத ஒன்று.
எனவே, இந்த அரசாங்கத்துடன் ஒருவிதமான விட்டுக் கொடு ப்புடன் ஏதோவொரு வகையில
இணங்கிச் சென்று தீர்வினைக் காண்பதே புத்திசாலித்தனமாக அமையும். இன்று சர்வதேசம்
தமிழ்க் கூட்டமைப்பை முற்றாகக் கைவிட்டுள்ள நிலையே காணப்படுகின்றது. இனிவரும்
காலங்களில் வெளிநாடுகளில் கூட புலி ஆதரவாளர்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட் டுள்ளது.
உலக நாடுகள் இலங்கை அரசாங்கத்துடன் கைகோர்த்துச் செயற்பட வுள்ளது. இதன் ஆரம்பத்தை
மலேசியா, சுவிட்சர்லாந்து, பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகள் தொடக்கி
வைத்துள்ளன.
தமிழ்க் கூட்டமைப்பு காலந்தாழ்த்தும் ஒவ்வொரு நாளும் தமிழ் மக்களது தீர்வு
முயற்சியில் பின்னடைவையே ஏற்படுத்தும். தமது அரசியல் இருப் பிற்காக தமிழ் மக்களது
வாழ்வைக் கேள்விக் குறியாக்காது அரசாங்கத்துடன் இணைந்து அம்மக்களுக்கு நல்லதோர்
தீர்வினைக் காண தமிழ்க் கூட்டமைப்பு முன்வர வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.
அகம்பாவமும், ஆளுமையில்லா அரசியலும், முட்டாள் தனமான அறிக்கைப் போராட்டமும் தமிழ்
மக்களை முள்ளிவாய்க்கால் நிலைக்கே மீண்டும் இட்டுச் செல்லும். எனவே, அரசாங்கத்தின்
நல்லெண்ண சமிக்கைகளைப் புரிந்து பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைந்து தமது
கருத்துக்களை முன்வைத்து முறையானதொரு தீர்வைக் காண்பதே சாலச்சிறந்தது.
No comments:
Post a Comment