Thursday, June 19, 2014

ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பியும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணைகளை மறைமுகாக ஆதரிக்கின்றன – ஜே.என்.பி!

Thursday, June 19, 2014
இலங்கை::ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பியும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணைகளை மறைமுகமான முறையில் ஆதரித்து வருவதாக ஜே.என்.பி கட்சி தெரிவித்துள்ளது.

இரண்டு கட்சிகளினதும் நடவடிக்கைகள் விசாரணைகளை ஆதரிக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஜே.என்.பி.யின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முசாம்மில் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழுவினை நாட்டுக்குள் அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து நேற்றைய தினம் நடைபெற்ற வாக்கெடுப்பில், இரண்டு கட்சிகளும் வாக்களித் தவறியிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment