Thursday, June 19, 2014
பெங்களூர்::முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்று அவரது தரப்பில் இறுதி வாதம் தொடங்கப்பட்டது.தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கம்பெனிகளை விடுவிக்க கோரும் மனுக்கள் விசாரித்து முடியும் வரை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி குணா முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாமல் இருக்க நீதிபதி விலக்கு அளித்தார். பின்னர், இறுதி வாதம் தொடங்கும்படி குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வக்கீலை கேட்டுக் கொண்டார்.இதன்படி, ஜெயலலிதா சார்பில் மூத்த வக்கீல் குமார் தனது வாதத்தை தொடங்கினார். அவர் கூறியதாவது:இந்த வழக்கு முழுக்க, முழுக்க அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் தொடுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமில்லாத ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளாக உள்ளது. அவர் தனது சொத்துக்கள் தொடர்பான விவரங்களையும் அதற்கு வரி செலுத்தியதற்கான எல்லா ஆதாரங்களையும் சரியாக வைத்திருந்தும், அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். மேலும், ஆவணங்களின் அடிப்படையில் அவர் தொடர்ந்து வாதாடினார்.

No comments:
Post a Comment