Saturday, June 28, 2014

தனுசின் ‘ஆடுகளம்’ படத்தில் வில்லனாக நடித்த புலிகளின் ஆதரவாளரான ஜெயபாலனுக்கு புலிகளின் ஆதரவாளர்கள் அடித்து உதை!!

Saturday, June 28, 2014
சென்னை::யார் இந்த டைரக்டர் கவுதமன்  வெளிநாட்டு புலிகளின் பணத்தில் வாழ்கை நடத்தும்  டைரக்டர் கவுதமன், தனுசின் ‘ஆடுகளம்’ படத்தில் வில்லனாக நடித்த புலிகளின் ஆதரவாளரான ஜெயபாலனுக்கு  புலிகளின் ஆதரவாளர்கள் அடித்து உதை!!

தனுசின் ‘ஆடுகளம்’ படத்தில் வில்லனாக நடித்தவர் ஜெயபாலன். பரதேசி உள்ளிட்ட மேலும் பல படங்களிலும் நடித்துள்ளார். இவர் இலங்கை தமிழ் கவிஞர் ஆவார்.
 
ஜெயபாலனுக்கு சென்னையில் அடி, உதை விழுந்தது. சிங்கள டைரக்டர் பிரசன்னவிதானகே இயக்கிய வித்யு வித்தவுட் யு என்ற படத்தின் சிறப்பு காட்சி திரையிட்ட போது இச்சம்பவம் நடந்தது.
 
இந்த படத்தை சென்னையில் உள்ள இரண்டு தியேட்டர்களில் திரையிட டைரக்டர் முயன்றார். ஆனால் இங்குள்ள தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. இது  (புலிகளின்) ஆதரவாளர்களுக்கு  தமிழர்களுக்கு எதிரான படம் என்று போராட்டத்தில் குதித்தனர். படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கும் மிரட்டல் வந்தது. இதையடுத்து படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. படத்தில் தமிழர்களுக்கு எதிரான காட்சிகள் இல்லை என்று டைரக்டர் மறுத்தார். படத்தை தமிழ் அமைப்பினருக்கு திரையிட்டு காட்டவும் ஏற்பாடு செய்தார்.
 
படத்தை பார்ப்பதற்காக நடிகர் ஆடுகளம் ஜெயபாலன், டைரக்டர் கவுதமன், மற்றும் புலிகளின் ஆதரவு 17 இயக்கத்தினர் மற்றும் மாணவர்கள் வந்து இருந்தனர்.
 
படம் முடிந்ததும் சிங்கள டைரக்டரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. படத்தில் பல இடங்களில் பயங்கரவாதிகள் என வசனம் வருவதாக கண்டித்தனர். டைரக்டர் கவுதமனும் சரமாரியாக கேள்வி கேட்டார். அதற்கு டைரக்டரால் பதில் சொல்ல இயலவில்லை. இதையடுத்து நடிகர் ஜெயபாலன் எழுந்து சிங்கள டைரக்டருக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் ஜெயபாலனை அடித்து உதைத்தனர். போலீசார் மீட்டு அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
 
படம் குறித்து டைரக்டர் கவுதமன் கூறியதாவது:–
 
வித்யு வித்தவுட் யு படம்  ராணுவத்தில் பணியாற்றும் சிங்களவருக்கும்   தமிழ் பெண்ணுக்கும் திருமணம் நடப்பது போல் படம் எடுத்துள்ளார். இது சிங்கள தமிழ் இனகலப்பை வலியுறுத்துவதாக உள்ளது. எனவே தமிழ் பெண்கள் சிங்களர்களை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று மறைமுகமாய் சொல்லி உள்ளார். இந்த படத்தை அனுமதிக்க முடியாது.
 
நடிகர் ஜெயபாலன் படம் பார்த்ததும் வெல்டன் டைரக்டர். எல்லோரும் கைதட்டுங்கள் என்றார். சிங்கள டைரக்டருக்கு அவர் ஆதரவாக பேசியது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 

No comments:

Post a Comment