Saturday, June 28, 2014
ராமேஸ்வரம்::ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடலில் ஜூன் 11ல் உயிருக்கு போராடிய
இலங்கைத் தமிழர் சிந்துசன், 27, என்பவரை மீனவர்கள் மீட்டு ராமேஸ்வரம்
கொண்டு வந்தனர்.
பாம்பனில் இருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு செல்ல முயன்ற
போது, தனுஷ்கோடி மூன்றாம் மணல் தீடையில் மீனவர்கள் இறக்கி விட்டதாக,
விசாரணையின் போது பொய் சொல்லி நாடகமாடினார்.
இதன்பின் சிந்துசனை தனுஷ்கோடி
போலீசார் காவலில் எடுத்து விசாரித்த போது, பாம்பனில் இருந்து 60 கிலோ
கஞ்சாவை கடத்தி சென்று, மூன்றாம் தீடையில் இறங்கியதாகவும்; அங்கு இலங்கை
படகு வராததால் கடலில் நீந்தி மீண்டும் தனுஷ்கோடிக்கு திரும்ப
முயற்சித்தாகவும் தெரிவித்தார்.கஞ்சா கடத்தலுக்கு உதவிய தனுஷ்கோடி புதுரோடு
மீனவர்கள் தியாகராஜன், முருகேசன், முனியசாமி, ராமநாதன், கர்ணன் கைது
செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment