Saturday, June 21, 2014
இலங்கை::பாதாள உலகக் குழுக்ககளைக் கொண்டு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை படுகொலை செய்ய ; புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் அமைப்புக்கள் முயற்சித்து வருவதாக கொழும்பு இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இயங்கி வரும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களைப் பயன்படுத்தி, பாதுகாப்புச் செயலாளரை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட திட்டம் அம்பலமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புலிகளின் சிரேஸ்ட புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவர் மலேஷியாவிலிருந்து இந்த கொலைத் திட்டத்தை தீட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
கடும்போக்குடைய அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் ஊடாக இந்த கொலை முயற்சி மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வன்னி யுத்தத்தின் பொது சிங்கப்பூர் வழியாக மலேஷியா சென்றடைந்த குறித்த புலி உறுப்பினர், புலிகளின் கொழும்பு புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பாக கடமையாற்றிவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நபர் தற்போது ஜெர்மனிய கடவுச் சீட்டை பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கோதபாய ராஜபக்ஷவின் படுகொலை முயற்சியின் பின்னணியில் சில வெளிநாட்டு புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்களும் செயற்படக் கூடுமென்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு;ளளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

No comments:
Post a Comment