Saturday, June 21, 2014
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் ஜிஹாத் தீவிரவாதத்தை
போஷிக்கக் கூடாது என ஜாதிக ஹெல உறும கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் ஆளும்
கட்சி அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இன நல்லுறவிற்கு
குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் தரப்பினருக்கு ஆதரவளிக்கக்
கூடாது என அவர் தெரிவித்துள்ளார். ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில்
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக்
குறிப்பிட்டுள்ளார்.
தலிபான்கள் போன்ற இஸ்லாமிய கடும்போக்குவாதிகளின் நடவடிக்கைகளினால் சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். பொதுபலசேனா அமைப்பு இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஹர்த்தல்களின் மூலம் அச்சுறுத்தல் ஏற்படுத்த முடியும் என ரவூப் ஹக்கீம் அசாத் சாலி போன்றவர்கள் கருதினால் அது தவறானதாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேருவளை மற்றும் தர்ஹா நகரில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு பொதுபல சேனா இயக்கம் பொறுப்பில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்று முஸ்லிம் இளைஞர்கள் பௌத்த பிக்குகளை தாக்கியதன் காரணமாகவே வன்முறைகள் வெடித்தது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment