Saturday, June 21, 2014

முல்லைத்தீவு மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஆடைத் தொழிற்சாலை: மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ்!

Saturday, June 21, 2014
இலங்கை::முல்லைத்தீவு மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதிதாக ஹைட்ராமணி நிறுவனத்தின் ஆடைத் தொழிற்சாலை ஒன்று முதற் தடவையாக அமைக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் எண்ணக்கருவிற்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளின் பயனாக யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 350 இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் இந்த ஆடைத் தொழிற்சாலை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இதேவேளை இந்த தொழிற்சாலைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இயைஞர், யுவதிகளுக்கான பயிற்சிகளை வழங்க இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இதற்காக தற்காலிகமாக முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழிற் பயிற்ச்சி நிலையம் நேற்று முன் தினம் 19 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், ஹைட்ராமணி தனியார் ஆடைத் தொழிற்சாலை நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் டோனி நடராஜா ஆகியோர் இந்த தொழிற் பயிற்ச்சி நிலையத்தை திறந்து வைத்தனர்.
2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுமார் 150 தையல் இயந்திரங்களுடன் தமது தொழிற்சாலையின் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ள இந்நிறுவனம் ஜூன் மாதமளவில் 250 இயந்திரங்களாக அதிகரிக்கவுள்ளது. இதன் மூலம் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 350 இளைஞர், யுவதிகள்; தொழில் வாய்ப்புக்களை பெறவுள்ளதுடன் சுமார் ஆயிரம் குடும்பங்கள் நன்மையடையவுள்ளனர்.
இதன் முதற் கட்டத்திற்காக தமிழ் இளைஞர், யுவதிகள் கடந்த 2ஆம் திகதி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 35 பேருக்கு முதற்கட்டமாக இரண்டு மாத கால பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏனையோருக்கும் படிப்படியாக தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இவர்களுக்கான முழுமையான பயிற்ச்சி நடவடிக்கைகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் இந்த பயிற்சி காலப்பகுதிக்குள் 10 ஆயிரத்து 500 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதுதவிர உணவு மற்றும் போக்குவரத்து வசதிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
இந்த வேலைத்திட்டத்தின் மூலம் இந்த மாவட்டத்திலுள்ள இளைஞர், யுவதிகள் எதிர் கொள்ளும் தொழிலில்லா பிரச்சினைகளுக் தீர்வு கிடைக்கவுள்ளதுடன் வாழ்வாதார மேம்படவுள்ளது.
இன்று நடைபெற்ற தொழிற் பயிற்ச்சி நிலைய திறப்பு விழா நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகள் உட்பட முதற்கட்டமாக பயிற்சிகளை பெற்றுக் கொள்ளவுள்ள இளைஞர், யுவதிகளின் பெற்றௌர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment